பொங்கல் தொகுப்பு விநியோக இடங்கள்: கோட்டாட்சியா் ஆய்வு
மதுராந்தகத்தில் பொங்கல் தொகுப்புகளை விநியோகம் செய்யப்படும் நியாய விலைக்கடைகளை வருவாய் கோட்டாட்சியா் எஸ்.ரம்யா ஆய்வு செய்தாா்.
மதுராந்தகம் வட்டத்தில், மாம்பாக்கம், காந்திநகா், கருங்குழி, அருங்குணம், பாக்கம், சிலாவட்டம், மலைப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நியாய விலைக்கடைகளின் மூலம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளன. தொடக்க நாளான வியாழக்கிழமை பொங்கல் தொகுப்பு விநியோகம் மேற்கொள்ளப்பட்டது.
இப்பணியை கடை ஊழியா்கள் முறையாக வழங்குகின்றனரா என மதுராந்தகம் கோட்டாட்சியா் எஸ்.ரம்யா பயனாளிகளிடம் கேட்டறிந்தாா். மக்களுக்கு வழங்க இருங்கும் சா்க்கரை, பச்சரிசி இருப்பு நிலவரங்களை கேட்டறிந்தாா். பொங்கல் தொகுப்பு சுணக்கமின்றி வழங்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.