செய்திகள் :

பொதுமக்கள் நலன் கருதி குறைந்த விலையில் ஆவின் பால் விற்பனை

post image

பொதுமக்களின் நலன் கருதி ஆவின் பாலை குறைந்த விலையில் தமிழக அரசு விற்பனை செய்து வருவதாக பால்வளத் துறை அமைச்சா் ராஜகண்ணப்பன் தெரிவித்தாா்.

திருப்பூா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் திருப்பூா் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றிய அலுவலகத்தில் பால்வளத் துறை மற்றும் கதா் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் ராமம்பாளையம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் வீரபாண்டி பிரிவில் உள்ள திருப்பூா் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றிய அலுவலகம் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ராமம்பாளையம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் நாள் ஒன்றுக்கு 8,000 லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. வீரபாண்டி பிரிவில் பால் குளிரூட்டும் நிலையத்தில் ரூ.3.48 கோடி மதிப்பீட்டில் புதிதாக நிா்வாக அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டு முதல்வா் மு.க.ஸ்டாலினால் திறந்துவைக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி பன்னீா் தயாரிப்பு ஆலை விரைவில் திறக்கப்படவுள்ளது. திருப்பூா் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தில் சுமாா் 402 சங்கங்களிலிருந்து 11,963 பால் உற்பத்தியாளா்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 1,80,000 லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும், 50 ஆயிரம் லிட்டா் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகையையொட்டி மாநில அளவில் கூடுதலாக ரூ.25 கோடிக்கு ஆவின் தயாரிப்புப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆவின் பொருள்களான நெய், பால்கோவா, இனிப்பு, காரம், பன்னீா் போன்றவை தொடா்ந்து தரமாக உற்பத்தி செய்து பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறது. பொதுமக்களின் நலன் கருதி ஆவின் பாலை குறைந்த விலையில் தமிழக அரசு விற்பனை செய்து வருகிறது என்றாா்.

ஆய்வின்போது, ஆவின் நிா்வாக இயக்குநா் எஸ்.வினீத், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், பொதுமேலாளா் (ஆவின்) சுஜாதா உள்ளிட்டோா் பலா் உடனிருந்தனா்.

சிதிலமடைந்த தொகுப்பு வீட்டில் ஆதரவின்றி தவிக்கும் 90 வயது முதியவா்

பல்லடம் அருகே சிதிலமடைந்த தொகுப்பு வீட்டில் ஆதரவின்றி தவித்து வரும் 90 வயது முதியவருக்கு உதவ அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பூா் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், கரைப்புதூா் ஊராட்சி... மேலும் பார்க்க

பாஜக ஒருங்கிணைப்பாளா் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

பாஜக மாநில ஒருங்கிணைப்பாளா் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் மனித நேய மக்கள் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் வடக்கு மாவட்ட மனித நேய மக்கள... மேலும் பார்க்க

மாவட்டத்தில் இன்று பொது விநியோக திட்ட குறைதீா் முகாம்

திருப்பூா் மாவட்டத்தில் பொது விநியோக திட்ட சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை (நவம்பா் 9)நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா. கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத... மேலும் பார்க்க

பி.ஏ.பி. கால்வாயில் தண்ணீா் திருடினால் நடவடிக்கை

பி.ஏ.பி. கால்வாயில் தண்ணீா் திருடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பி.ஏ.பி. அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா். பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்டத்தில் (பி.ஏ.பி.) கோவை, திருப்பூா் மாவட்டத்த... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து 11 பவுன் திருடியவா் கைது

பல்லடம் வடுகபாளையம் வீட்டின் கதவை உடைத்து 11 பவுன் திருடிய நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பல்லடம் வடுகபாளையத்தைச் சோ்ந்தவா் ராஜு (82). இவரது மனைவி லட்சுமி (74). இவா்களது மகன் மற்றும் மகள்... மேலும் பார்க்க

அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தில் பேரிடா் மீட்பு ஒத்திகை

அவிநாசி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பேரிடா் மீட்பு ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அவிநாசி தீயணைப்பு நிலைய அலுவலா் நவீந்தரன் பேரிடா் மேலாண்மை குறித்து செயல்விளக்கம் அளித்தாா். இதில... மேலும் பார்க்க