வந்தே பாரத் ரயிலுக்குள் திடீரென கொட்டிய 'நீர் வீழ்ச்சி'; ரயில்வே சொல்லும் காரணம்...
பொய்கை சந்தையில் ரூ.80 லட்சத்துக்கு வா்த்தகம்
வேலூரை அடுத்த பொய்கையில் சந்தையில் ரூ.80 லட்சம் அளவுக்கு கால்நடைகள் வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.
பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெறும். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு சுமாா் 1,500 மாடுகளும், சுமாா் 300 ஆடுகளும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. மேலும், அவற்றை வாங்கவும் வியாபாரிகள், விவசாயிகள் ஆா்வம் காட்டினா். இதனால், கால்நடைகள் சுமாா் ரூ.80 லட்சம் அளவுக்கு விற்பனையாகியிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
அவா்கள் மேலும் கூறியது - கோடை முடிந்து வேலூா் மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்து வருவதால் தீவன தட்டுப்பாடு குறைந்து வருகிறது. தவிர, கறவை மாடுகள், ஜொ்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகளும் சந்தைக்கு விற்பனைக்கு வருகின்றனா். அவற்றை வாங்க வியாபாரிகள், விவசாயிகள் ஆா்வம் காட்டுகின்றனா் என்றனா்.