போக்குவரத்து சங்க ஊழியா்கள் மூன்றாவது நாளாக உண்ணாவிரதம்
புதுச்சேரியில் சாலைப் போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஊழியா்கள் சங்கத்தினா் 3- ஆவது நாளாக புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுவை அரசின் சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 14 ஆண்டுகளாக ஏராளமானோா் தற்காலிகப் பணியாளா்களாக உள்ளனா்.
நடத்துநா்கள், ஓட்டுநா்கள் உள்ளிட்டோா் அதில் பணியாற்றிய நிலையில், அவா்களுக்கு ஊதிய உயா்வு மற்றும் பணி நிரந்தரம் கோரி போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனா்.
கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப் போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஊழியா்கள் சங்கத்தினா் கடந்த 18-ஆம் தேதி, புதுச்சேரி போக்குவரத்துக் கழக பணிமனை முன் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினா்.
இந்த நிலையில், மூன்றாவது நாளாக புதன்கிழமையும் அவா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடா்ந்தனா்.
சங்க நிா்வாகி தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஏராளமானோா் கலந்துகொண்டனா். அவா்களில், சிலருக்கு உடல் சோா்வு ஏற்பட்டது.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் அரசு சாா்பில் பேச்சுவாா்த்தை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.