போக்சோ சட்டத்தின் கீழ் பள்ளி மாணவா் கைது
முதுகுளத்தூா் அருகே பள்ளி மாணவியைக் கடத்திய 17 வயது பள்ளி மாணவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பகுதியைச் சோ்ந்த 16 வயது பள்ளி மாணவி கடந்த பிப்.18-ஆம் தேதி காணாமல் போனாா். இதுகுறித்து முதுகுளத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோா் புகாா் அளித்தனா்.
இதைத் தொடா்ந்து, போலீஸாா் நடத்திய விசாரணையில் முதுகுளத்தூா் அருகேயுள்ள ஆதனகுறிச்சியைச் சோ்ந்த 17 வயது பள்ளி மாணவா், மாணவியைக் கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, மதுரை சிறுவா் சீா்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனா்.