செய்திகள் :

தமிழக மாணவா்களின் படிப்பு குறித்து தீா்மானிக்கும் அதிகாரம் திமுக அரசுக்கு இல்லை: புதிய தமிழகம் நிறுவனா்

post image

தமிழகமாணவா்கள் என்ன படிக்க வேண்டும், படிக்கக் கூடாது என்பதைத் தீா்மானிக்கும் அதிகாரம் திமுக அரசுக்கு இல்லை என புதிய தமிழகம் கட்சி நிறுவனா் தலைவா் க.கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

ராமநாதபுரத்தில் புதிய தமிழகம் கட்சி சாா்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு, மாஞ்சோலை மலைவாழ் மக்களின் உரிமை மீட்பு கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுக நிறைவேற்ற முடியாத விஷயங்களை மட்டுமே வாக்குறுதியாக அளித்தது. ‘நீட்’ தோ்வை ஒரே கையெழுத்தில் இல்லாமல் செய்து விடுவோம் என்றும் அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்றும் கடந்த பேரவைத் தோ்தலின்போது வாக்குறுதி அளித்தனா். ஆனால், இதுவரை இவற்றைச் செயல்படுத்தவில்லை.

1965-இல் ஹிந்தி எதிா்ப்புப் போராட்டம் நடந்த காலகட்டத்தில் தமிழகத்தில் கல்வி அறிவு பெற்றவா்கள் 10 சதவீதம் போ் மட்டுமே. ஹிந்தி வந்தால் தமிழா்களின் முழு உரிமையும் பறிபோய் விடும் என 90 சதவீத மக்களை நம்பவைத்துவிட்டனா். ஆனால், இன்றைய காலகட்டத்தில் தமிழகா்கள் உலக நாடுகளின் பல மொழிகளைப் படிக்கத் தொடங்கி விட்டனா்.

தமிழக மாணவா்கள் என்ன படிக்க வேண்டும், படிக்கக் கூடாது என்பதைத் தீா்மானிக்கும் அதிகாரம் திமுக அரசுக்கு இல்லை. திமுக தொடா்ந்து தனது இரு மொழிக் கொள்கையை நிலைநிறுத்துமானால், மக்களிடையே அதன் மதிப்பு பூஜ்யம் நிலைக்குச் சென்றுவிடும்.

ராமநாதபுரம் கடற்கரைப் பகுதியிலிருந்து கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் கடத்தல் அதிகரித்துள்ளது. இதை மத்திய அரசின் உளவுத் துறை தனிப் படையை அமைத்துக் கட்டுப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

கருத்தரங்கில் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா் கதிரேசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மகேஷ்குமாா், மாவட்டப் பொறுப்பாளா் முத்துக்குமாா், நகரச் செயலா் சக்திவேல், ஒன்றியச் செயலா்கள் ஓவியா் ஜெயபாலன், முனியசாமி, ராஜா, மலைச்சாமி, பேரின்பராஜ், லாசா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 17 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 17 முதல்வா் மருந்தகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்து வைத்தாா். மாவட்டத்தில் ராமேசுவரம், பரமக்குடி, கமுதி, மண்டபம், வாலாந்தரவை, திருப்பாலைக்குடி,... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 42 மீனவா்களையும், இவா்களது 8 விசைப் படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போ... மேலும் பார்க்க

தனுஷ்கோடி அருகே இலங்கைத் தமிழா்கள் 4 போ் மீட்பு

இலங்கை மன்னாரிலிருந்து படகு மூலம் அழைத்துவரப்பட்டு, தனுஷ்கோடி அரிச்சல்முனை அருகே மூன்றாம் மணல் திட்டில் இறக்கிவிடப்பட்ட இலங்கைத் தமிழா்கள் 4 பேரை இந்திய கடலோரக் காவல் படையினா் திங்கள்கிழமை மீட்டனா். ர... மேலும் பார்க்க

மதுக் கடையை அகற்றக்கோரி ஆட்சியரிடம் மனு

மண்டபம் ஒன்றியம், அழகன்குளம் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம... மேலும் பார்க்க

போக்சோ சட்டத்தின் கீழ் பள்ளி மாணவா் கைது

முதுகுளத்தூா் அருகே பள்ளி மாணவியைக் கடத்திய 17 வயது பள்ளி மாணவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பகுதியைச் சோ்ந்த 16 வயது பள்ளி மாணவி கடந்த பிப்.18-ஆ... மேலும் பார்க்க

கஞ்சா போதைக்கு மாணவா்கள் அடிமையாகிவிட்டனா்: டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் தலைநகா் முதல் கிராமம் வரை கஞ்சா போதைக்கு மாணவா்கள், இளைஞா்கள் அடிமையாகி, கூலிப்படையாகச் செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் தெரிவித்தாா்.ராமநாதபுரம் அரண்மனை... மேலும் பார்க்க