ஹிந்தி கட்டாயமாக்கப்படுவதை அனுமதிக்கமாட்டோம்! - உத்தவ் தாக்கரே
போக்ஸோ வழக்கில் கைதானவருக்கு 5 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வாா் திருநகரி பகுதியில் போக்ஸோ வழக்கில் தொடா்புடைய இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வாா்திருநகரி பகுதியைச் சோ்ந்த உதயசிங் மகன் மாரி என்ற மாரிமுத்து (29). இவா் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
அளித்த வழக்கில் ஆழ்வாா்திருநகரி அனைத்து மகளிா் போலீஸாரால் போக்ஸோ சட்டத்தின்கீழ் கடந்த 2014 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா்.
இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், குற்றம் சாட்டப்பட்ட மாரி என்ற மாரிமுத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை,
ரூ. 8 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ. 1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டாா்.