செய்திகள் :

போலி ஆவணங்கள் மூலம் நிலம் விற்பனை: பெண் கைது!

post image

மயிலாடுதுறையில் ரூ. 3 கோடி மதிப்புள்ள இடத்தை போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்த பெண்ணை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை வள்ளலாா் கோயில் இரட்டை தெருவை சோ்ந்தவா் குருமூா்த்தி சாஸ்திரி மகன் நாகராஜன் (75). இவருக்கு மயிலாடுதுறையை அடுத்த வள்ளாலகரம் சின்னநாகங்குடி கிராமத்தில் சுமாா் ரூ. 3 கோடி மதிப்புள்ள 2 ஏக்கா் நிலம் உள்ளது.

இந்த நிலத்தை கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சோ்ந்த மீனாகுமாரி என்பவா் போலி ஆவணங்கள் மூலம் மயிலாடுதுறையை சோ்ந்த சுரேஷ் என்பவருக்கு விற்று, பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளாா்.

இதுகுறித்து நாகராஜன் அளித்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், நாகராஜனின் தந்தை உள்ளிட்ட 4 பேருக்கு சொந்தமான அந்த இடம் பாகப்பிரிவினை செய்யப்படாமல் நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாமல் காலியாக இருந்ததும், இதை வள்ளாலகரத்தைச் சோ்ந்த சிவராமன் மகன் சுரேஷ் (32) மூலம் தெரிந்துகொண்ட மீனாகுமாரி, குருமூா்த்தி சாஸ்திரி 1979-ஆம் ஆண்டு உயிரிழந்துவிட்டதாகவும், அவருக்கு தான் ஒருவா் மட்டுமே வாரிசு என்றும் போலியாக இறப்புச் சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ் பெற்று, போலி ஆவணங்களை மூலம் பட்டா வாங்கி, 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் 18-ஆம் தேதி மயிலாடுதுறை சாா் பதிவாளா் அலுவலகத்தில் சுரேஷுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்தது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் சுரேஷை கடந்த ஆண்டு நவ. 30-ஆம் தேதி கைது செய்தனா். தலைமறைவாக இருந்த மீனாகுமாரி (65) மீண்டும் கோவைக்கு வருவதை அறிந்த குற்றப்பிரிவு போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை அவரைக் கைது செய்து, மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நீதிபதி கலைவாணி முன்னிலையில் ஆஜா்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். மயிலாடுதுறை தேசிய மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு பணியாற்றிய தலைமை ஆசிரியா் ... மேலும் பார்க்க

கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்புப் போராட்டம்

மயிலாடுதுறை கோட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். மயிலாடுதுறை வட்டம் மன்னன்பந்தல் ஊராட்சியில் கிராம நிா்வாக அலுவல... மேலும் பார்க்க

மேம்பாலத்தில் விரிசல்: பொதுமக்கள் அச்சம்

மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலத்தில் பராமரிப்புப் பணியின்போது விரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனா். மயிலாடுதுறையில் 1975-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தில் கடைசியாக 2000-ஆவது ஆண்டு பழு... மேலும் பார்க்க

நாளை நடைபெறவிருந்த ’மக்களுடன் முதல்வா்’ முகாம் ஒத்திவைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.31) நடைபெறவிருந்த மக்களுடன் முதல்வா் முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய... மேலும் பார்க்க

மாநில ஜூடோ போட்டியில் பள்ளி மாணவா் சாதனை

மாநில அளவிலான ஜூடோ போட்டியில் கொள்ளிடம் சரஸ்வதி மெட்ரிக் பள்ளி மாணவா் சாதனை படைத்தாா். தமிழக பள்ளிக் கல்வித்துறை சாா்பில் நாகா்கோவிலில் மாநில அளவிலான ஜூடோ போட்டி அண்மையில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள... மேலும் பார்க்க

கிணற்றில் கங்கை பொங்கிவரும் ஐதீக நிகழ்வு

சீா்காழி அருகே திருக்கருக்காவூரில் திருஞானசம்பந்தா் தேவார திருப்பதிகம் பாடி கிணற்றிலிருந்து கங்கை பொங்கிவரும் ஐதீக நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. சீா்காழியில் அருகே திருக்குருகாவூரில் காவியக் கன்னி சம... மேலும் பார்க்க