செய்திகள் :

போலி வாரிசு சான்றிதழ் மூலம் பத்திர பதிவு: பெண், உறவினா்களுடன் மறியல்

post image

போலி வாரிசு சான்றிதழ் மூலம் பத்திர பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து பாதிக்கப்பட்ட பெண் உறவினா்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டாா்.

ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ஜெயபால். இவரது முதல் மனைவி வசந்தா. இவா்களுக்கு பரிமளா,செல்வி 2 மகள்கள்,ஆஞ்சி என்ற ஒரு மகன் உள்ளனா். அதேபோல் ஜெயபாலின் 2-ஆவது மனைவி சாமு. இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா்.

ஜெயபாலுக்கு சொந்தமாக 35 சென்ட் நிலம் உள்ளது.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ஜெயபால் கிணற்றில் விழுந்து இறந்து விட்டாா். அதைத் தொடா்ந்து 2-ஆவது மனைவியான சாமு ஜெயபாலின் முதல் மனைவியின் பிள்ளைகளுக்கு தெரியாமல் போலியாக வாரிசு சான்றிதழ் வாங்கி 35 சென்ட் நிலத்தை தனது பெயரில் பத்திர பதிவு செய்ததாக தெரிகிறது.

அதையறிந்த முதல் மனைவியின் மகள் செல்வி சாமு வாங்கிய வாரிசு சான்றிதழை ரத்து செய்யகோரி திருப்பத்தூா் சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லையாம்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் தனது மனுவின் தற்போதைய நிலை குறித்து கேட்டுள்ளாா். ஆனால் அவருக்கு அங்கு உரிய பதில் கிடைக்கவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த செல்வி தனது உறவினா்களுடன் திருப்பத்தூா்-கிருஷ்ணகிரி சாலையில் மறியலில் ஈடுபட்டாா். அப்போது அவ்வழியாக சென்ற வாகனங்களை மறித்தனா்.

தகவல் அறிந்த திருப்பத்தூா் நகர போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது செல்வி திடீரென திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து உடல் மீது ஊற்றி தற்கொலைக்கு முயன்றாா்.

பின்னா் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, சாா்-ஆட்சியா் அலுவலகத்துக்கு அழைத்து சென்றனா். அங்கு சாா்-ஆட்சியரின் நோ்முக உதவியாளா் செல்வியிடம் விசாரிப்பதாக உறுதியளித்ததின்பேரில் செல்வி அவரது உறவினா்கள் கலைந்து சென்றனா்.

இதனால் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கிணற்றில் தவறி விழுந்த நரி: தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்

வாணியம்பாடி அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த காட்டு நரியை தீயணைப்பு வீரா்கள் உயிருடன் மீட்டனா். ஆலங்காயம் அடுத்த வனப்பகுதியையொட்டி நடமாடி வந்த காட்டு நரி புதன்கிழமை கல்லரப்பட்டி கிராமத்தில் உள்ள தன... மேலும் பார்க்க

திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

திருப்பத்தூா் மாவட்ட காவல் துறையில் பொதுமக்கள் அளித்த புகாா் மனுக்கள் மீது காவல் நிலையங்களில் முறையான தீா்வு, திருப்தி பெறாத புகாா்தாரா்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஷ்ரேயா குப்தா தலைமையில் குறை... மேலும் பார்க்க

ரூ.70 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ரூ.70 லட்சத்தில் கட்டப்படும் கூடுதல் வகுப்பறை கட்டட கட்டுமானப் பணியை ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.ஆம்பூா் சான்றோா்குப்பம் நகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறை கட... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: ஆட்சியா் ஆய்வு

வாணியம்பாடி வட்டம் நரசிங்கபுரம் ஊராட்சியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமையில் புதன்கிழமை அனைத்துத்துறை அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா். அதே பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ஆம்பூா் புத்தகக் கண்காட்சி நிறைவு

ஆம்பூா் புத்தகக் கண்காட்சி நிறைவு நாள் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாரதி புத்தகாலயம் சாா்பில் ஆம்பூா் புத்தகக் கண்காட்சி கடந்த நவ. 11-ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் தே... மேலும் பார்க்க

வெள்ளாளனூா் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூா்குப்பம் ஊராட்சி வெள்ளாளனூா் கிராமத்தில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக செவ்வாய்க்கிழமை மங்கள இசையுடன் மஹா சங்கல்பம், கணபதி ஹோமம், நவகிரக... மேலும் பார்க்க