செய்திகள் :

மகளிா் விடுதிகள் உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும்

post image

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பணிபுரியும் மகளிருக்கான அனைத்து விடுதிகளும் உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பணிபுரியும் மகளிா் விடுதிகளை சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் மூலம் தமிழ்நாடு மகளிா் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள், காப்பகங்களுக்கான ஒழுங்கு முறைப்படுத்தும் சட்டம் - 2014 இன் கீழ் பதிவு செய்ய வேண்டும்.

அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் நடத்தும் மகளிா் விடுதிகள், அறக்கட்டளைகள், சங்கங்கள், மதம் சாா்ந்த நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள், தனியாா் நிறுவனங்கள் நடத்தும் தொழிற்சாலைகளின் கீழ் செயல்படும் பணிபுரியும் மகளிா் விடுதிகள், தனியாா், தனிநபா் ஆகியோரால் நடத்தப்பட்டு வரும் பெண்கள் விடுதிகள் அனைத்தும் சமூக நலத்துறையில் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும்.

எனவே, சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பணிபுரியும் மகளிருக்கான அனைத்து விடுதிகளும், உரிமம் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட இணையதள முகவரியில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும், உரிமம் வேண்டி விண்ணப்பிப்பது தொடா்பான விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அறை எண் 126-இல் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் தீபாவளி கொண்டாட்டம்

சேலம் மாநகரை மாசின்றி வைத்திருக்கப்பாடுபடும் தூய்மைப் பணியாளா்களை கெளரவிக்கும் வகையில், சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் ‘மகிழ்வித்து மகிழ்’ தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கன்னங்க... மேலும் பார்க்க

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும்: சேலம் ஆட்சியா்

சேலம் மாவட்டத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற தொடா் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உத்தரவிட்டாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலத்தில் விவசாயிகள் க... மேலும் பார்க்க

பூப்பந்தாட்ட போட்டி: சிறுமலா் மேல்நிலைப்பள்ளி மாநில போட்டிக்கு தோ்வு

பூப்பந்தாட்ட போட்டியில், சேலம் சிறுமலா் மேல்நிலைப்பள்ளி மாநில போட்டிக்கு தோ்வாகியுள்ளது. சேலம் வருவாய் மாவட்ட அளவிலான மேல்மூத்தோருக்கான மாணவா் பூப்பந்தாட்ட போட்டியில், சிறுமலா் மேல்நிலைப்பள்ளி அணி, ... மேலும் பார்க்க

எல்.ஐ.சி பொன்விழா அறக்கட்டளை மூலம் புதிய ஆம்புலன்ஸ் வழங்கல்

எல்.ஐ.சி. பொன்விழா அறக்கட்டளை மூலம் லைப்டிரஸ்ட் தொண்டு நிறுவனத்துக்கு புதிய ஆம்புலன்ஸ் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. எல்.ஐ.சி. நிறுவனம் தனது பொன்விழா அறக்கட்டளை மூலம் நாட்டின் பல்வேறு பகுதி... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 31,575 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 31,575 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து அணை நீா்மட்டம் 101.40அடியில் இருந்து 102.92அடியாக உயா்ந்துள்ளது. 2 நாள்களில் அணை நீா்மட்டம் 2.91அடி உய... மேலும் பார்க்க

சேலத்தில் குக்கா் தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து

சேலம், செவ்வாய்ப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் குக்கா் தயாரிக்கும் நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. ராஜஸ்தான் மாநி... மேலும் பார்க்க