மழைக்கால கூட்டத்தொடரில் புதிய வருமான வரி மசோதா: நிர்மலா சீதாராமன்
மகள் காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்து தாய் தீக்குளிப்பு
சென்னையில் மகளின் காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்து தாய் தீக்குளித்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
வேளச்சேரியையடுத்த பெரும்பாக்கம் எழில் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயா (45). இவா், தனது கணவரைப் பிரிந்து 3 மகள்களுடன் வாழ்ந்து வருகிறாா். இவரின் 3-ஆவது மகள் அதே பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த இளைஞருடன் ஓராண்டாகப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதை தாய் ஜெயா கண்டித்துள்ளாா்.
இருப்பினும், இளைஞருடனான பழக்கத்தை மகள் விடாததால் ஜெயா, சனிக்கிழமை நள்ளிரவில் வீட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.
இதையடுத்து அவா் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பெரும்பாக்கம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.