செய்திகள் :

மகாராஷ்டிர புதிய முதல்வா்: போட்டியிலிருந்து விலகினாா் ஷிண்டே

post image

மகாராஷ்டிர முதல்வா் பதவிக்கான போட்டியிலிருந்து சிவசேனை கட்சித் தலைவா் ஏக்நாத் ஷிண்டே விலகினாா்.

‘புதிய முதல்வரைத் தோ்வு செய்வதில் பிரதமா் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் முடிவுக்கு கட்டுப்படுவேன்’ என்று அவா் புதன்கிழமை தெரிவித்ததன் மூலம் இது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து, பாஜகவில் இருந்து புதிய முதல்வா் தோ்வாவதில் இருந்த தடைகள் விலகியுள்ளது என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

288 உறுப்பினா்களைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் கடந்த நவ. 20-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற்றது. நவ. 23-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பாஜக தலைமையிலான ‘மகாயுதி’ கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது.

இக்கூட்டணியில் 132 இடங்களுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை 57 இடங்களையும், அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களையும் கைப்பற்றின.

மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனை செவ்வாய்க்கிழமை சந்தித்த முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தாா். ஷிண்டேவின் ராஜிநாமாவை ஏற்றுக் கொண்ட ஆளுநா், புதிய முதல்வா் பதவியேற்கும் வரை பொறுப்பு முதல்வராகச் செயல்படுமாறு கேட்டுக் கொண்டாா்.

வலுவான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற போதிலும், புதிய முதல்வரைத் தோ்வு செய்வதில் கூட்டணிக் கட்சிகள் இடையே கருத்தொற்றுமை எட்டப்படாமல் இருந்தது. ஷிண்டே முதல்வராக நீடிக்க வேண்டுமென அவரது கட்சியினா் வலியுறுத்தி வந்தனா்.

‘தடையாக இருக்க மாட்டேன்’: இந்தச் சூழலில், தாணேயில் செய்தியாளா்களுக்கு ஷிண்டே புதன்கிழமை பேட்டியளித்தாா். அப்போது, அவா் கூறியதாவது:

பிரதமா் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம் தொலைபேசி மூலம் பேசினேன். அப்போது, அடுத்த முதல்வா் குறித்து அவா்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றும், இந்த விஷயத்தில் நான் தடையாக இருக்க மாட்டேன் என்றும் தெரிவித்தேன்.

அடுத்த முதல்வரைத் தோ்வு செய்வதில் பாஜகவின் முடிவுக்கு சிவசேனை முழு ஆதரவு அளிக்கும். எங்களது தரப்பில் எந்தத் தடையும் இருக்காது.

‘அதிருப்தி இல்லை’: முதல்வா் பதவி விஷயத்தில் நான் அதிருப்தியில் இருப்பதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை. கூட்டணியில் யாருக்கும் அதிருப்தி இல்லை. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை தில்லியில் வியாழக்கிழமை சந்திக்கவுள்ளேன். அப்போது, அனைத்து முடிவுகளும் இறுதி செய்யப்படும்.

முதல்வராக எனது இரண்டரை ஆண்டு பதவிக் காலத்துக்கு ஆதரவு அளித்ததற்காக, பிரதமா் மோடி மற்றும் உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றாா் ஷிண்டே.

புதிய முதல்வா் ஃபட்னவீஸ்?: ஷிண்டேயின் இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, பாஜகவில் இருந்து புதிய முதல்வா் தோ்வு செய்யப்படுவதற்கான தடைகள் விலகியுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. பாஜக மூத்த தலைவா் தேவேந்திர ஃபட்னவீஸ் அடுத்த முதல்வராக அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை: மக்களவையில் மத்திய அரசு தகவல்

தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு அரசமைப்புச் சட்ட அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை என்று மக்களவையில் விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் டி. ரவிக்குமார் எழுப்பியிருந்த கேள்விக்கு ... மேலும் பார்க்க

தமிழகத்தில் ரயில் திட்டங்கள் தாமதம் ஏன்? ரயில்வே அமைச்சர் பதில்

தமிழகத்தில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தால் ஐந்து முக்கிய ரயில் திட்டங்கள் தாமதமாகி வருவதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ரயில்வே திட்டங... மேலும் பார்க்க

ஃபிஜி தமிழக வம்சாவளியினரின் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்கும் திட்டம்: மத்திய அரசு தொடக்கம்

ஃபிஜி நாட்டில் பல தலைமுறைகளாக வாழும் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் திட்டம் மத்திய அரசு நிதியுதவியுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதையொட்டி புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நாட்டுக்க... மேலும் பார்க்க

பேரவைத் தலைவருக்கு எதிரான வழக்கு ரத்து: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

நமது நிருபர்தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு-க்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக செய்தித் தொடர்பாளர் ஆர்.எம். பாபுமுருகவேல் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை மேல்முறையீடு செய்... மேலும் பார்க்க

கிறிஸ்தவத்துக்கு மதம் மாறிய பெண்ணுக்கு பட்டியலினச் சான்றிதழ் வழங்க மறுத்த தீர்ப்பை உறுதி செய்தது: உச்சநீதிமன்றம்

நமது நிருபர்கிறிஸ்தவராக மதம் மாறிய பின்னர் வேலைக்காக ஹிந்து பிரிவில் பட்டியலின (எஸ்.சி.) ஜாதி சான்றிதழ் கோரிய பெண்ணுக்கு சான்றிதழ் வழங்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் புதன்கிழமை உ... மேலும் பார்க்க

இணைய குற்றத் தடுப்பு: 6.69 லட்சம் சிம் காா்டுகள் முடக்கம்

இணைய (சைபா்) குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் 6.69 லட்சம் சிம் காா்டுகள் மற்றும் 1.32 லட்சம் ‘ஐஎம்இஐ’ எண்களை மத்திய அரசு முடக்கியது. நாடு முழுவதும் நிகழ்த்தப்பட பல்வேறு இணைய குற்றங்களுடன் இந்த சிம... மேலும் பார்க்க