செய்திகள் :

மகாராஷ்டிரத்தில் மேலும் 2 பேருக்கு ஜிபிஎஸ்: மொத்த பாதிப்பு 205!

post image

மகாராஷ்டிரத்தில் ஜிபிஎஸ் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 205-ஐ எட்டியுள்ளது.

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மகாராஷ்டிரத்தில் மேலும 2 பேருக்கு ஜிபிஎஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 205 ஐ எட்டியுள்ளது.

தற்போது இந்த தொற்று பாதிக்கப்பட்டு 177 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அதில் 20 பேர் வென்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் இந்நோய்க்கு இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர். மாநிலத்தின் பெரும்பாலான பாதிப்புகள் புணேவில் இருந்து கண்டறியப்பட்டுள்ளன என்றார்.

150 பெண்கள் பாலியல் வன்கொடுமை, 3,000 பேர் பலி! என்ன நடக்கிறது காங்கோவில்?

பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள் காரணமாக உடலில் உருவாகும் ஜிபிஎஸ் பாதிப்பு பல காலமாக சமூகத்தில் இருந்தாலும், அண்மையில் மகாராஷ்டிர மாநிலம் புணேவிலும், மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவிலும் அந்தப் பாதிப்பு தீவிரமாக பரவிவருகிறது.

பால் மற்றும் இறைச்சியை முறையாக கொதிக்க வைத்து சமைக்காவிடில் அதிலிருந்து கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோயைப் பரப்பும் பாக்டீரியா உருவாகலாம் என மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பாக திருவள்ளூரைச் சோ்ந்த 9 வயது சிறுவன் ஜிபிஎஸ் பாதிப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

பூடான் பெட்ரோல் விலை: இந்தியாவிலிருந்து சுற்றுலா சென்றவருக்கு அதிர்ச்சி!

இந்தியாவிலேயே சில மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100க்கும் கீழ் இருந்துகொண்டிருந்தாலும், பூடானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலைதான் இன்றைய ஹாட் டாப்பிக்.பிகார், மேற்கு வங்கம், ஒடிசா, மத்தியப் பிரதேச... மேலும் பார்க்க

அதென்ன 'ஒய்' பிரிவு பாதுகாப்பு?

இந்தியாவில், குடியரசுத் தலைவர் தொடங்கி, நாட்டின் மிக முக்கிய பதவியை வகிப்பவர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலருக்கும் பல வகையான பாதுகாப்புகள் வழங்கப்படுகின்றன.ஒருவருக்கு எந்தவிதம... மேலும் பார்க்க

அதானி குழும லாரியால் இருவர் பலி! 8 வாகனங்களை எரித்து கலவரம்!

மத்தியப் பிரதேசத்தில் கனரக லாரி மோதிய விபத்தில் இருவர் பலியாகினர்.மத்தியப் பிரதேசத்தில் சிங்ரௌலி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ராம்லல்லு யாதவ், ராம் சாகர் பிரஜாபதி இருவர் மீதும் ... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கியது!

நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் தொடங்கின. நாடு முழுவதும... மேலும் பார்க்க

புதிய வருமான வரி மசோதாவை ஆய்வு செய்ய சிறப்புக் குழு நியமனம்!

புதிய வருமான வரி மசோதாவை ஆய்வு செய்ய 31 பேர் கொண்ட சிறப்புக் குழுவை மக்களவைத் தலைவர் நியமித்துள்ளார்.மக்களவையில் புதிய வருமான வரி மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை தாக்கல் செய்தார். ... மேலும் பார்க்க

அமெரிக்க விமானங்கள் அமிருதசரஸ் வருவது ஏன்? பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

அமிருதசரஸ்: நாடு கடத்தும் இந்தியர்களுடன், அமெரிக்க விமானங்கள் அமிருதசரஸ் வருவது ஏன் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கேள்வி எழுப்பியிருக்கிறார்.அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை நாடு ... மேலும் பார்க்க