ஏன் வேண்டாம் மும்மொழி? மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஸ் பதில்!
திறமை இருக்கிறது..! இளம் வீரர் ஜேக் பிரேசர்-மெக்கர்க்கை நம்பும் ஸ்டீவ் ஸ்மித்!
இலங்கை உடனான தொடரில் தோல்வியடைந்தாலும் இளம் வீரர்களை நம்புவதாக ஸ்மித் கூறியுள்ளார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி முழுமையாக வென்ற நிலையில், ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது.
ஆஸி. அணியின் தொடக்க வீரராக இளம் வீரர் ஜேக் பிரேசர் -மெக்கர்க் ( ஜேஎஃப்எம்) களமிறங்கினார். டி20யில் கலக்கிய இவர் ஒருநாள் போட்டிகளில் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
22 வயதாகும் ஜேஎஃப்எம் 2 போட்டிகளில் 11 (2,9) ரன்கள் மட்டுமே எடுத்தார். கடைசி போட்டியில் ஆஸி. 174 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
திறமை இருக்கிறது
சாம்பியன்ஸ் டிராபி ஆஸி. அணியில் ஜேஎஃப்எம் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஸ்மித் கூறியதாவது:
ஜேஎஃப்எம் அதிரடியான வீரர். அவருக்கு திடலில் அனைத்து இடங்களிலும் அடிக்கும் திறமை இருக்கிறது. அவர் சரியான நேரத்தில் பந்தினை அடிக்க முயற்சிக்க வேண்டும். ஆனாலும் கடைசி போட்டியில் அவர் சில சிறப்பான ஷாட்டுகளை அடித்தார்.
ஜேக் பிரேசர்-மெக்கர்க்கிடம் திறமை இருக்கிறது. அதனால்தான் அவரை அணியில் எடுத்துள்ளோம்.
ஜேஎஃப்எம் மிகவும் ஆபத்தான கிரிக்கெட்டர். பாகிஸ்தான் ஃபிட்ச் அவருக்கு மிகவும் உதவும். அணியுடன் இருந்து அவர் இன்னும் நிறைய கற்றுக்கொள்வார் என நினைக்கிறேன் என்றார்.