ஓராண்டில் 10 மாதங்களும் விளையாடினால் எப்படி? கபில் தேவ் விமர்சனம்
இந்திய வீரர்கள் ஓராண்டில் 10 மாதங்களும் விளையாடினால் காயம்தான் ஏற்படுமென கபில் தேவ் கூறியுள்ளார்.
இந்தியாவின் என்சிஏ (தேசிய கிரிக்கெட் அகாதெமி) காயமடைந்தவர்களின் முகாந்திரமாக மாறி வருகிறது.
பிஜிடி தொடரில் சிட்னியில் ஜஸ்பிரீத் பும்ரா காயம் காரணமாக வெளியேறினார். அதனால் அந்தத் தொடரை இழந்த இந்திய அணிக்கு சாம்பியன்ஸ் டிராபியிலும் விளையாடமாட்டார் என்ற அதிர்ச்சி மேலும் நிலை குலைய செய்தது.
ஷமி காயத்தினால் ஓராண்டு விளையாடாமல் இருந்தார். சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி பிப்.22ஆம் தேதி மோதுகிறது.
இந்த நிலையில் கபில் தேவ் கூறியதாவது:
இந்திய வீரர்கள் ஓராண்டுக்கு 10 மாதங்களும் கிரிக்கெட் விளையாடுவதுதான் என்னை கவலைக்குள்ளாக்குகிறது. அதனால்தான் காயம் அதிகமாக ஏற்படுகிறது.
அணியில் இல்லாதவர்களைக் குறித்து ஏன் பேச வேண்டும்? இது குழுவிற்கான போட்டி. தனி மனிதர்களுக்கானது அல்ல. இது டென்னிஸ், பாட்மின்டன், கோல்ப் போன்றது இல்லை. ஆனால், எதாவது நடந்தால் உங்களால் எதுவும் செய்ய முடியாது. இந்திய அணிக்கு வாழ்த்துகள். நன்றாக விளையாடுங்கள்.
இளைஞர்களை பார்க்கும்போது நம்பிக்கை பிறக்கிறது. நாங்கள் இளைஞர்களாக இருக்கும்போது அந்தளவுக்கு நம்பிக்கையுடன் இல்லை. அவர்களுக்கு வாழ்த்துகள்.
கிரிக்கெட் விளையாடவில்லை எனில் கோல்ப் விளையாட செல்லுங்கள். அதில் நல்ல அனுபவம் கிடைக்கிறது என்றார்.