பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்ட நிதியை அதிகரிக்க வேண்டும்: எம்.பி.க்கள் கோரிக...
ஆதிக்கத்துக்கு முடிவு..! ஒயிட்வாஸ் ஆனது ஆஸ்திரேலியா!
இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி தோல்வி தழுவியது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி முழுமையாக வென்ற நிலையில், முதலாவது ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்தது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதிய இரண்டாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி காலேயில் இன்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சரித் அசலங்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியில் நிசங்கா 6 ரன்களில் ஆட்டமிழக்க மதுஷகா 51 ரன்களும்(4 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) குஷல் மெண்டிஸ் 101 ரன்களும்(11 பவுண்டரி) விளாசினர்.
அவர்களுக்குப் பின்னர் வந்த அசலங்கா முதல் ஆட்டத்தைப் போலவே 6 பவுண்டரிகள், 3 சிக்ஸருடன் 78 ரன்களும் ஜனித் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸருடன் 32 ரன்களும் குவித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது.
இதையும் படிக்க.. அதிவேக 6000* ரன்கள்..! விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் பாபர் அசாம்!
வலிமையான ஆஸ்திரேலிய அணி எளிய இலக்கான 282 ரன்களை கடக்க தொடக்கம் முதலே திணறியது. இலங்கை சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் திணறிய ஆஸ்திரேலிய அணி 24.2 ஓவர்களில் 107 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம் இலங்கை அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஸ்மித் 29 ரன்களும் விக்கெட் கீப்பர் ஜோஸ் இங்கிஷ் 22 ரன்களும் டிராவிஸ் ஹெட் 18 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாக வென்று அசத்தியுள்ளது. மேலும் சொந்த மண்ணில் இலங்கை அணி வென்ற 7-வது தொடர் இதுவாகும்.
குஷல் மெண்டிஸ் ஆட்டநாயகன் விருதையும், சரித் அசலங்கா தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
இதையும் படிக்க.. காயத்தில் இருந்து மீண்ட ரச்சின்! தொடக்க ஆட்டத்தில் விளையாடுவாரா?