பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்ட நிதியை அதிகரிக்க வேண்டும்: எம்.பி.க்கள் கோரிக...
அசிதா பெர்னாண்டோ அசத்தல்: 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆஸி.!
இலங்கைக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகளை இழந்து ஆஸி. தடுமாறி வருகிறது.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையான வென்ற ஆஸி. அணி முதல் ஒருநாள் போட்டியில் மோசமாக விளையாடி தோல்வியுற்றது.
2ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் விளையாடிய இலங்கை அணி 281/4 ரன்கள் குவித்தது.
அடுத்ததாக பேட்டிங் விளையாடிவரும் ஆஸி. அணி 17 ஓவர்கள் முடிவில் 83/6 ரன்கள் எடுத்துள்ளது.
இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஹசரங்கா 1, துனித் வெல்லாலகே 2 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்கள்.
ஆஸி. அணியில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 27* ரன்களுடன் விளையாடி வருகிறார்.