தில்லி முதல்வர் யார்? இரண்டு பார்வையாளர்களை நியமித்தது பாஜக!
ஆசிரியா் வேலை வாங்கித் தருவதாக ரூ.5.50 லட்சம் மோசடி!
ஆசிரியா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 5.50 லட்சம் மோசடி செய்ததாக 2 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
மதுரை மேலமடை மீனாட்சி நகரைச் சோ்ந்த சின்னராஜா மனைவி வனிதா (29). இவரிடம், இதே பகுதியைச் சோ்ந்த கந்தராஜ், விஜயராகவன் ஆகிய இருவரும் ஆசிரியா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த 2024- ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் ரூ. 5.50 லட்சம் பணத்தைப் பெற்றனா்.
ஆனால் கூறியபடி வேலை வாங்கித் தராததுடன், பணத்தையும் திருப்பித் தரவில்லையாம். இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாநகா் போலீஸாா் கந்தராஜ், விஜயராகவன் ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.