செய்திகள் :

`மகாராஷ்டிராவில் இந்தி கட்டாயமில்லை; ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்!’ - பட்னாவிஸ் பதில்

post image

மகாராஷ்டிரா பள்ளிகளில் 1வது வகுப்பு முதல் 5வது வகுப்பு வரை இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மகாராஷ்டிரா கல்வியாளர்களும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து மராத்தியை தவிர்த்து மூன்றாவது மொழி விவகாராத்தில் மற்ற எந்த மொழியும் கட்டாயம் கிடையாது என்று தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்து இருக்கிறார்.

இதையடுத்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ``மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மூன்றாவது மொழி விவகாரத்தில் மராத்தி தவிர்த்து வேறு எந்த மொழியும் கட்டாயம் கிடையாது என்று சொல்லி இருக்கிறார். இதனை பிரதமரும், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரும் தெளிவுபடுத்தவேண்டும். மத்திய அரசு மூன்றாவது மொழி கற்றுக்கொடுக்கவேண்டும் என்று கூறி தமிழகத்திற்கு கொடுக்கவேண்டிய ரூ.2,152 கோடியை கொடுக்குமா?’’ என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.

பட்னாவிஸ் ஸ்டாலினுக்கு பதில்..!

மு.க.ஸ்டாலினின் இந்த பதிவுக்கு பதிலளித்துள்ள தேவேந்திர பட்னாவிஸ், ''புதிய கல்விக்கொள்கை எந்த மொழியையும் கற்றுக்கொள்ளவேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்யவில்லை. ஆங்கிலம் தவிர்த்து மேலும் இரண்டு மொழிகளை கற்றுக்கொடுக்கும்படி மட்டுமே கூறுகிறது. மகாராஷ்டிராவில் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் உட்பட மாணவர்கள் விரும்பும் எந்த மொழியையும் மூன்றாவது மொழியாக கற்றுக்கொள்ளலாம். பன்மொழிக்கொள்கையை நீங்கள் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள் என்பதுதான் கேள்வி. யாராவது இந்தி படிக்கவிரும்பினால் உங்களுக்கு என்ன பிரச்னை?''என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே மகாராஷ்டிராவில் 1 முதல் 5வது வகுப்பு வரை இந்தி கட்டாயம் என்ற உத்தரவுக்கு அரசு தடை விதித்து இருக்கிறது. இது தொடர்பாக மாநில கல்வி அமைச்சர் தாதா புசே அளித்த பேட்டியில், ``புதிய கல்விக்கொள்கையில் எந்த மொழியும் கட்டாயம் கிடையாது. எனவே இந்தி கட்டாயம் படிக்கவேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தி விருப்ப பாடமாக இருக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Pahalgam Attack: J&K-ல் சுற்றுலாவாசிகள்மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு; வலுக்கும் கண்டனங்கள்!

ஜம்மு காஷ்மீரின், பஹல்காமிலுள்ள (Pahalgam) சுற்றுலா தளத்தில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 20-க்கும் மேற்பட்டோ... மேலும் பார்க்க

PTR: `அது அவருக்கே பலவீனமாக மாறிவிடும்; புரிந்துக் கொள்வார் என...' - பி.டி.ஆருக்கு ஸ்டாலின் அறிவுரை!

நீதிக்கட்சியின் தலைவராக இருந்தவரும், பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் தாத்தாவுமான பி.டி.ராஜனின் ‘வாழ்வே வரலாறு’ நூல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஏப்ரல் 22) நடைபெற்றது. இதில் பங்கேற்... மேலும் பார்க்க

Pahalgam Attack: "தீவிரவாதி சொன்ன அந்த வார்த்தை" - கண்முன் கணவரை இழந்த மனைவி கண்ணீர்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் குதிரை சவாரி செய்து பைசரன் மலை உச்சி வரை சென்று அங்கிருக்கும் ரிசார்ட்டில் தங்கி வருவது பிரபலமான சுற்றுலா பயணமாக இருந்து வருகிறது. சுற்றுலா பயணிகள் அங்கு இருக்கும் இந்தக் க... மேலும் பார்க்க

`அம்பேத்கர் சிலை நிறுவ அனுமதியுங்கள்; சாதி கொடுமைகளை கட்டுப்படுத்துக' - அரசுக்கு விசிக கோரிக்கை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மறுசீராய்வு கலந்தாய்வுக் கூட்டத்தில் பெருகிவரும் சாதிய கொடுமைகளை கட்டுப்படுத்துவது, கல்வி நிலையங்களில் சாதிய பாகுபாடுகளை அகற்றுவதற்கான சட்டம் இயற்றுதல், ஆளுநரை நீக்குதல்,... மேலும் பார்க்க

பல்லடம் அரசு மருத்துவமனையில் இயங்காத ஜெனரேட்டர்; செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட அவலம்!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட வெளி மற்றும் உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், பல்லடம் செஞ்சேரிமலை பகுதியில் இரண்டு இருசக்கர வாக... மேலும் பார்க்க

மனு கொடுக்க வந்த மக்களை ஒருமையில் பேசி, அவமரியாதையாக நடத்திய காவலர் - ஆட்சியர், இதையும் கவனிக்கலாம்!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமையான நேற்று மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள் மற்றும் ப... மேலும் பார்க்க