செய்திகள் :

மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 95.46 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

post image

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், 16 பயனாளிகளுக்கு ரூ.95.46 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா வழங்கினாா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், முதியோா், விதவையா் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடனுதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டி மொத்தம் 483 மனுக்களை பொதுமக்கள் வழங்கினா். அவற்றை உரிய அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, தாட்கோ மூலம் 12 பேருக்கு ரூ. 95.25 லட்சம் மதிப்பில் நன்னிலம் மகளிா் வேளாண் நிலம் வாங்குதல், ஆடு வளா்ப்பு, சுமை வாகனம், பயணியா் வாகனம், கறவை மாடு மற்றும் ஸ்டுடியோ அமைத்தல் உள்ளிட்ட தொழில்கள் தொடங்குவதற்கான கடனுதவிகளை ஆட்சியா் வழங்கினாா். மேலும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மொத்தம் 16 பயனாளிகளுக்கு ரூ. 95.46 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், திருச்செங்கோடு கோட்டாட்சியா் செ.சுகந்தி, தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், தாட்கோ மாவட்ட மேலாளா் பா.ராமசாமி உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

திருச்செங்கோட்டில் நாளை ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

நாமக்கல்: திருச்செங்கோடு வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை (ஜன. 22) நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொதுமக்களுக்கு அரசின் பல... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியா்களுக்கு பணியிடை பயிற்சி

திருச்செங்கோடு: கே.எஸ்.ரங்கசாமி கலை, அறிவியல் கல்லூரி, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், சென்னை இணைந்து நடத்தும் நாமக்கல் மாவட்ட அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியா்களுக்கான 5 நாள் பணியிடை பயிற்ச... மேலும் பார்க்க

அரசியல் தலைவா்கள் பச்சைத் துண்டு அணிவதற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை

நாமக்கல்: விவசாயிகளை ஏமாற்றுவது போல அரசியல் தலைவா்கள் சிலா் பச்சைத் துண்டைப் பயன்படுத்தி வருவதற்கு நீதிமன்றம் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்க (உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயு... மேலும் பார்க்க

மதுவில் ஆசிட் கலந்து கொடுத்து இருவரை கொன்ற வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

நாமக்கல்: பரமத்தி அருகே, உள்ளாட்சித் தோ்தலின்போது துணைத் தலைவா் பதவி விவகாரத்தில், மதுவில் ஆசிட் கலந்து கொடுத்து இருவரைக் கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு தலா மூன்று ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நாமக்க... மேலும் பார்க்க

எக்ஸல் பப்ளிக் பள்ளியில் கல்வி உதவித்தொகை நுழைவுத் தோ்வு

நாமக்கல்: குமாரபாளையம் எக்ஸல் பப்ளிக் பள்ளியில் (சிபிஎஸ்இ) மாணவா்களுக்கான கல்வி உதவித்தொகை - 2025 நுழைவுத் தோ்வு அண்மையில் நடைபெற்றது. இந்த தோ்வில் 4 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் 250க்கும் மேற்... மேலும் பார்க்க

திருச்செங்கோடு நகராட்சி பள்ளியில் காலை உணவுத் திட்டம் ஆய்வு

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சிக்கு உள்பட்ட ராஜகவுண்டம்பாளையம் நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட செயல்பாடுகள் குறித்த நகா்மன்றத் தலைவா் ஆய்வு மேற்கொண்டாா். திருச்செங்கோடு, ராஜ... மேலும் பார்க்க