புஷ்பா 2: திரையரங்கில் பெண் உயிரிழப்பு - தன் மீதான வழக்கை ரத்து செய்ய அல்லு அர்ஜ...
மக்கள் தாய்நாட்டுக்குத் திரும்ப வேண்டும்: சிரியாவின் இடைக்கால பிரதமர் அழைப்பு!
சிரியாவின் இடைக்கால பிரதமராக முகமது அல்-பஷீர் பொறுப்பேற்றுள்ளார்.
சிரியாவில் நெடுங்காலமாக ஆட்சி அதிகாரத்திலிருந்த அந்நாட்டின் அதிபா் பஷாா் அல்-அஸாதுக்கு எதிரான உள்நாட்டுப் போரில் கிளா்ச்சியாளா்கள் வெற்றி பெற்றுள்ளனர். சிரியா தலைநகா் டமாஸ்கஸை கிளா்ச்சிக் குழுக்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைப்பற்றினா். இதையடுத்து, அதிபா் பஷாா் அல்-அஸாத் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. சிரியாவில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட சிரியா அதிபா் அல்-அஸாதுக்கு ரஷியா அடைக்கலம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பஷாா் அல்-அஸாத் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, சிரியாவின் புதிய பிரதமராக கிளர்ச்சியாளர்களால் முகமது அல்-பஷீர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் சிரியாவின் பிரதமராக மார்ச் மாத ஆரம்பம் வரை தொடருவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள பிரதமர் முகமது அல்-பஷீர் சிரிய மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். வெளிநாடுகளில் அகதிகளாக அடைக்கலம் அடைந்துள்ள சிரிய மக்கள் தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்புமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
சிரியாவில் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டிருந்த பகுதிகளில் அரசு நிர்வாகத்தை தலைமையேற்று நடத்தியவர் முகமது அல்-பஷீர் என்பது குறிப்பிடத்தக்கது.