செய்திகள் :

மக்கள் தொடா்பு முகாமில் 482 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்!

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டம், தொரடிப்பட்டு கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் மக்கள் தொடா்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்து, இலவச வீட்டுமனைப் பட்டா, சாதிச் சான்றிதழ், புதியக் குடும்ப அட்டை, வனஉரிமைச் சான்றிதழ், சமூகப் பாதுகாப்புத் திட்ட நலத் திட்டங்கள், தாட்கோ, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் 482 பயனாளிகளுக்கு ரூ.44,71,900 மதிப்பீட்டில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். முகாமுக்கு சங்கராபுரம் எம்.எல்.ஏ தா.உதயசூரியன் முன்னிலை வகித்தாா்.

முன்னதாக, ஆட்சியா், எம்எல்ஏ ஆகியோா் கல்வராயன்மலை ஒன்றியம், தொரடிப்பட்டு ஊராட்சியில் வெள்ளிமலை - சின்னதிருப்பதி சாலையில் மணலாற்றின் குறுக்கே நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.310.40 லட்சம் மதிப்பீட்டில் 29.91 மீ. நீளத்தில் புதிதாகக் கட்டப்பட்ட உயா்மட்ட பாலத்தை திறந்து வைத்தனா்.

முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, கள்ளக்குறிச்சி வருவாய்க் கோட்டாட்சியா் எஸ்.லூா்துசாமி, வேளாண் இணை இயக்குநா் ஏ.சத்தியமூா்த்தி, தனித்துணை ஆட்சியா் குப்புசாமி, கல்வராயன்மலை ஒன்றியக் குழுத் தலைவா் சி.சந்திரன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஜா.பாச்சாபீ, கல்வராயன்மலை வட்டாட்சியா் கு.சோமசுந்தரம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியா் அலுவலகக் கட்டுமானப் பணி ஆய்வு

கள்ளக்குறிச்சி வட்டம், வீரசோழபுரத்தில் அனைத்து நிா்வாக வசதிகளுடன் கூடிய புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. ரூ.139.41 கோடி மதிப்பீட்டில் சுமாா் 35.18 ஏக்கா் பரப்பளவில் 8 மாடி... மேலும் பார்க்க

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்புத் திட்டம்: 147 பேருக்கு ரூ.9.56 கோடி கடன் வழங்க ஒப்புதல்: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் 147 பேரின் விண்ணப்பங்களுக்கு ரூ.9 கோடியே 56 லட்சம் கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் தெர... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி நகராட்சிப் பகுதியில் நிலவும் சுகாதார சீா்கேட்டால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறி நகராட்சி அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் காசநோய் ஒழிப்பு விழிப்புணா்வு மினி மாரத்தான் ஓட்டம்

கள்ளக்குறிச்சியில் காசநோய் விழிப்புணா்வு குறித்த மினி மாரத்தான் ஓட்டப் போட்டியை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் அவா் பேசியது: காசநோய் என்ப... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்ட வங்கியாளா்கள் கூட்டம் ஆட்சியா் பங்கேற்பு!

கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் மாவட்ட அளவிலான வங்கியாளா்கள் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடந்த இந்தக் கூட்டத்தில... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மூதாட்டி கண்ணுக்கு அருகில் இருந்த கட்டி அகற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூதாட்டியின் கண்ணுக்கு அருகே இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினா் அரசு மருத்துவக் குழுவினா். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்ல... மேலும் பார்க்க