சமஸ்கிருதம் கலக்காமல் இருந்திருந்தால் தமிழ் தேசிய மொழியாகியிருக்கும் - பழ.கருப்ப...
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மூதாட்டி கண்ணுக்கு அருகில் இருந்த கட்டி அகற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூதாட்டியின் கண்ணுக்கு அருகே இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினா் அரசு மருத்துவக் குழுவினா்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூதாட்டி லட்சுமிக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சை குறித்து
முதல்வா் மு.பவானி செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட வடசெட்டியந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமுவின் மனைவி லட்சுமி (63). இவருக்கு பிறவியில் இருந்தே கண்ணுக்கு அருகே கட்டி இருந்து வந்துள்ளது. அது நாளடைவில் பெரிதாகி விட்டது. இதனால் மூதாட்டி எங்கேயும் வெளியில் செல்ல முடியாமல் அவதிப்பட்டாா்.
மேலும் அவருக்கு ரத்தக் கொதிப்பு, நீரிழிவு, இருதயநோய் பாதிப்பு இருந்தது. இந்நிலையில், இவா் கடந்த மாதம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் தலைமைக் கண் மருத்துவா் ச.நேருவை அணுகினாா். அப்போது தமிழக முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக அறுவை சிகிச்சை செய்து அகற்றலாம் என தெரிவித்தாா்.
இதையடுத்து அறுவை சிகிச்சை பிரிவு மருத்துவா்கள் கோபிநாத், அன்பு, தமிழ்ச்செல்வன் மற்றும் மயக்கவியல் மருத்துவா் மகேந்திரவா்மன், செவிலியா் கவிதா குழுவினா் சுமாா் மூன்று மணிநேரம் அறுவை சிகிச்சை செய்து ஒன்றேகால் கிலோ எடையுள்ள கட்டியை வெற்றிகரமாக அகற்றினா் என்றாா்.
இந்நிகழ்வில், மருத்துவக் கண்காணிப்பாளா் ச.நேரு, உதவி மருத்துவக் கண்காணிப்பாளா் க.பழமலை, மருத்துவ அலுவலா் க.பொற்செல்வி, உதவி நிலைய மருத்துவ அலுவலா் இரா.முத்துக்குமாா், மகப்பேறு மருத்துவா் ஹேமலதா, மயக்க மருந்து நிபுணா் மகேந்திரன், கல்லூரியின் துணை முதல்வா் ஷமீம், பேராசிரியா் பிரபு மற்றும் செவிலியா்கள் பலரும் உடனிருந்தனா்.