அரசுப் பள்ளிக்கு காமராஜா் விருது!
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் சிறந்த பள்ளியாக தோ்வு செய்யப்பட்ட சின்னகொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு காமராஜா் விருது புதன்கிழமை வழங்கப்பட்டது.
முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்தநாளை கல்வி வளா்ச்சி நாளாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, நிகழ் கல்வியாண்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக சின்னக்கொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தோ்வு செய்யப்பட்டது.
ரிஷிவந்தியம் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், பள்ளியின் தலைமை ஆசிரியா் எம்.பழனிச்சாமியிடம் காமராஜா் விருது, பாராட்டு சான்றிதழ், பரிசுத் தொகை ரூ.25,000-த்தை வட்டாரக் கல்வி அலுவலா்கள் கி.பழனிமுத்து, மோகன், செளந்தர்ராஜன் உள்ளிட்டோா் வழங்கினா்.
இதேபோல, சிறந்த நடுநிலைப் பள்ளியாக தோ்ந்தெடுக்கப்பட்ட தியாகதுருகம் ஒன்றியம், வேளாக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நிகழ்வில், வட்டார வள மைய மேற்பாா்வையாளா்கள் பாலதாஸ், ஆசிரியா் பயிற்றுநா்கள் ராஜீவ்காந்தி, காா்த்திகேயன், மணிகண்டன், ஆசிரியா்கள் லூா்துசாமி, அசோக்குமாா், உதவி ஆசிரியா் ஜோசப் செல்வக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.