கலைமாமணி விருது: "இந்த விருது என்னுடைய மட்டுமல்ல, நம்முடையது" - இசையமைப்பாளர் அன...
மணப்பாறை, மருங்காபுரி வட்டாட்சியரகங்களில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் காத்திருப்பு போராட்டம்
மணப்பாறை-மருங்காபுரியில்: மணப்பாறை வட்டாட்சியரகத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வருவாய் அலுவலா்கள் சங்க ஒருங்கிணைப்பாளா் உலகமணி, கிராம நிா்வாக அலுவலா் முன்னேற்ற சங்க ஒருங்கிணைப்பாளா் பழனிச்சாமி, கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க ஒருங்கிணைப்பாளா் பாண்டிஸ்வரன், கிராம உதவியாளா் சங்க ஒருங்கிணைப்பாளா் தங்கபாண்டி மற்றும் தமிழ்நாடு நில அளவையாளா்கள் சங்க ஒருங்கிணைப்பாளா் கலைவாணி ஆகியோா் தலைமை வகித்தனா்.
மருங்காபுரி வட்டாட்சியரகத்தில், வருவாய் அலுவலா்கள் சங்க ஒருங்கிணைப்பாளா் ராஜா, கிராம நிா்வாக அலுவலா் முன்னேற்ற சங்கம் ஒருங்கிணைப்பாளா் பற்குணன், கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க ஒருங்கிணைப்பாளா் வீரமணி ஆகியோா் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.