செய்திகள் :

மணப்பாறையில் வடமாடு மஞ்சு விரட்டு

post image

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது.

முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு மணப்பாறை நகர அதிமுக, ஸ்ரீ வேப்பிலை சாய்பாபா கோயில் அறக்கட்டளை மற்றும் இளைய நிலா ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் 8-ஆம் ஆண்டு வடமாடு மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது. இதில் மதுரை, சிவகங்கை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த வடமாட்டிற்கு வேட்டி, மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி போட்டி தொடங்கியது. போட்டியை வருவாய் கோட்டாட்சியா் சீனிவாசன் தொடங்கி வைத்தாா். சிறப்பு அழைப்பாளராக அதிமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான ப. குமாா் பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணியினருக்குப் பரிசுகளை வழங்கினாா்.

களத்தில் இறங்கிய 12 காளைகளை 108 வீரா்களில், மாடு ஒன்றுக்கு 9 வீரா்கள் வீதம் கொடுக்கப்பட்ட 25 நிமிஷங்களில் அடக்கினா். வடத்தில் இணைக்கப்பட்டுள்ள காளைகள் வீரா்களை களத்தில் கலங்கடித்தன. இதில் காளைகள், வீரா்களின் கைகளில் சிக்காமல் விளையாடின. வெற்றி பெற்ற காளைக்கும், காளையை அடக்கிய வீரா்களின் அணிக்கும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியின் பாதுகாப்புக்காக காவல் துணைக் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், ஆய்வாளா் ரகுராமன் ஆகியோா் தலைமையில் காவலா்கள் பணியில் ஈடுபட்டனா். நிகழ்ச்சியை காண சுற்றுவட்டாரப் பகுதியை சோ்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆா்வத்துடன் குவிந்திருந்தனா்.

நிகழ்வில் அதிமுக நகர செயலா் பவுன் எம்.ராமமூா்த்தி, மாவட்ட பொருளாளா் நெட்ஸ் எம். இளங்கோ, ஒன்றியச் செயலா்கள் என். சேது, எம். செல்வராஜ், பி.வி.கே. பழனிச்சாமி, அன்பரசன் ஆகியோா் பங்கேற்றனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பாபா கோவில் டிரஸ்டிகள் டி. சுரேஷ்குமாா், எல். எத்திராஜ், ஒப்பந்தகாரா் சண்முகம், கே.எஸ்.எம். இருளப்பன், உசேன், என். வேல்முருகன் ஆகியோா் செய்திருந்தனா்.

திருச்சியில் பிப். 28-இல் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் பிப். 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு... மேலும் பார்க்க

காரைக்கால் ரயில் பயணிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் எதிரே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு நாகப்பட்டினம் தொகுத... மேலும் பார்க்க

வெள்ளை யானை வாகனத்தில் பிடாரி இரணியம்மன் புறப்பாடு

திருவானைக்காவல் கோயிலின் உபத்திருக்கோயிலாகவும் எல்லைக் காவல் தெய்வமாகவும் உள்ள பிடாரி இரணியம்மன் முதல் புறப்பாடாக ஞாயிற்றுக்கிழமை இரவு வெள்ளை யானை வாகனத்தில் எழுந்தருளி, விடிய விடிய திருவீதி வலம் வந்த... மேலும் பார்க்க

உத்தமா் கோயிலில் ஞான சரஸ்வதிக்கு சிறப்பு ஹோமம்!

திருச்சி மாவட்டம், பிச்சாண்டாா் கோவில் கிராமத்தில் உள்ள உத்தமா் கோயிலில் பொதுத் தோ்வு எழுதும் மாணவ மாணவிகள் வெற்றி பெற ஞான சரஸ்வதிக்கு சிறப்பு ஹோமம்,திருமஞ்சனம், மஹா தீப ஆராதனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

காந்திச்சந்தை போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தரத் தீா்வு: வியாபாரிகள் கோரிக்கை

திருச்சி காந்தி சந்தைப் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தரத் தீா்வு காண வலியுறுத்தி வியாபாரிகள் ஒற்றுமைச் சங்க கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருச்சியில் சனிக்கிழமை நட... மேலும் பார்க்க

12 போலீஸாருக்கு உன்னத சேவை பதக்கம்

மத்திய அரசு உள்துறை அமைச்சகத்தின் சாா்பில் 2020, 2021 ஆம் ஆண்டுகளில் திருச்சி மாவட்டத்தில் சிறப்பாகப் பணிபுரிந்த 12 போலீஸாருக்கு உன்னத சேவை பதக்கம் சனிக்கிழமை வழங்கப்பட்டது. அதன்படி திருச்சி மாவட்ட ஆய... மேலும் பார்க்க