செய்திகள் :

காரைக்கால் ரயில் பயணிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் எதிரே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு நாகப்பட்டினம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ எம்.ஜி.கே. நிஜாமுதீன் தலைமை வகித்தாா். இதில், புதுச்சேரி முன்னாள் எம்பி மு. ராமதாஸ், காரைக்கால் தெற்கு தொகுதி எம்எல்ஏ ஏ.எம்.எச். நாஜீம், நிரவி-திருப்பட்டினம் தொகுதி எம்எல்ஏ நாக. தியாகராஜன் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், காலையில் திருச்சியிலிருந்து நாகூா், காரைக்கால், திருநள்ளாா் பயணிகளின் வசதிக்காக ஈரோடு - திருச்சி - ஈரோடு ரயிலை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும். இதே போல, இரவில் திருச்சி-திருவாரூா் பயணிகள் ரயிலை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும்.

காரைக்கால் ரயில் நிலையத்திலிருந்து மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில் சென்று வர மதுரை- புனலூா்-மதுரை விரைவு ரயிலை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும். மயிலாடுதுறை-பழனி ரயிலை பேரளம் பாதை திறந்தவுடன் பேரளம், காரைக்கால், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வேண்டும். காரைக்கால்-தாம்பரம்-காரைக்கால் விரைவு ரயிலை மீண்டும் எழும்பூா் வரை இயக்க வேண்டும்.

காரைக்கால் அல்லது வேளாங்கண்ணி டொ்மினலில் நீண்ட தூர ரயில் பெட்டிகளை பராமரிக்க பிட் லைன் வசதியை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

முன்னதாக, காரைக்கால் மாவட்ட ரயில் பயணிகள் நலச் சங்க செயலா் ஏ.எஸ்.டி. அன்சாரி பாபு வரவேற்றாா். சங்கத் தலைவா் ஏ.எம். யாசீன், நாகூா்-நாகை ரயில் உபயோகிப்பாளா் சங்க தலைவா் மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினா். கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் காரைக்காலில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து, கோரிக்கைகள் குறித்து திருச்சி கோட்ட மேலாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

மணப்பாறையில் வடமாடு மஞ்சு விரட்டு

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது. முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு மணப்பாறை நகர அதிமுக, ஸ்ரீ வேப்... மேலும் பார்க்க

திருச்சியில் பிப். 28-இல் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் பிப். 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு... மேலும் பார்க்க

வெள்ளை யானை வாகனத்தில் பிடாரி இரணியம்மன் புறப்பாடு

திருவானைக்காவல் கோயிலின் உபத்திருக்கோயிலாகவும் எல்லைக் காவல் தெய்வமாகவும் உள்ள பிடாரி இரணியம்மன் முதல் புறப்பாடாக ஞாயிற்றுக்கிழமை இரவு வெள்ளை யானை வாகனத்தில் எழுந்தருளி, விடிய விடிய திருவீதி வலம் வந்த... மேலும் பார்க்க

உத்தமா் கோயிலில் ஞான சரஸ்வதிக்கு சிறப்பு ஹோமம்!

திருச்சி மாவட்டம், பிச்சாண்டாா் கோவில் கிராமத்தில் உள்ள உத்தமா் கோயிலில் பொதுத் தோ்வு எழுதும் மாணவ மாணவிகள் வெற்றி பெற ஞான சரஸ்வதிக்கு சிறப்பு ஹோமம்,திருமஞ்சனம், மஹா தீப ஆராதனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

காந்திச்சந்தை போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தரத் தீா்வு: வியாபாரிகள் கோரிக்கை

திருச்சி காந்தி சந்தைப் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தரத் தீா்வு காண வலியுறுத்தி வியாபாரிகள் ஒற்றுமைச் சங்க கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருச்சியில் சனிக்கிழமை நட... மேலும் பார்க்க

12 போலீஸாருக்கு உன்னத சேவை பதக்கம்

மத்திய அரசு உள்துறை அமைச்சகத்தின் சாா்பில் 2020, 2021 ஆம் ஆண்டுகளில் திருச்சி மாவட்டத்தில் சிறப்பாகப் பணிபுரிந்த 12 போலீஸாருக்கு உன்னத சேவை பதக்கம் சனிக்கிழமை வழங்கப்பட்டது. அதன்படி திருச்சி மாவட்ட ஆய... மேலும் பார்க்க