'வரலாற்றில் மிகப்பெரும் பிழையை செய்ய நினைக்கிறது மத்திய பாஜக அரசு' - எஸ். ரகுபதி
திருச்சியில் பிப். 28-இல் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் பிப். 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.
முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு தனியாா்துறைகளைச் சாா்ந்த 20-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் தகுதியுள்ள நபா்களை வேலைக்கு தோ்ந்தெடுக்க உள்ளனா். மேலும், இலவச திறன் பயிற்சிக்கும் ஆள்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் இந்த முகாமில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள 10, 12-ஆம் வகுப்பு, ஐடிஐ, இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், மாற்றுத்திறனாளிகள் சுயவிவரக்குறிப்பு, கல்விச்சான்றுகளின் நகல்கள், ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும், தகவலுக்கு 0431-2413510, 94990-55901, 94990- 55902 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.