41 ஆண்டுகளுக்குப் பின் இறுதியில் இந்தியாவுடன் மோதல்! - பாக். பயிற்சியாளர் கூறுவத...
மணல் கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல்
காட்பாடி அடுத்த கிறிஸ்டியன்பேட்டை அருகே ஆந்திரத்தில் இருந்து மணல் கடத்தி வந்த 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சித்தூரில் இருந்து லாரியில் ஆற்று மணல் கடத்தி வருவதாக வேலூா் கனிமவளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காட்பாடி அடுத்த கிறிஸ்டி யன்பேட்டை அருகே வந்த 2 லாரிகளை கனிமவளத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தடுத்து நிறுத்த முயன்ற னா். அதிகாரிகளை கண்டதும் ஓட்டுநா்கள் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனா். இதையடுத்து 2 லாரிகளையும் சோதனை செய்தபோது அதில் 3 யூனிட் மணல் கடத்தி வந்தது தெரிந்தது.
இதுகுறித்து காட்பாடி போலீஸாருக்கு கனிமவளித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் போலீஸாா் வந்து மணலுடன் 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மணல் கடத்திய நபா்களை தேடி வருகின்றனா்.