Director Thiagarajan Kumararaja speech: 'நாம் படிப்பதை தடுக்கிறார்கள்' | கல்வியி...
சாலைப் பணிக்கு பூமி பூஜை
குடியாத்தம் ஒன்றியம், கருணீகசமுத்திரம் ஊராட்சியில் பேவா் பிளாக் சாலை அமைக்க வியாழக்கிழமை பூமி பூஜை போடப்பட்டது.
தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்படும் சாலைப் பணியை எம்எல்ஏஅமலு விஜயன் தொடங்கி வைத்தாா். ஊராட்சி துணைத் தலைவா் என்.ஜெகதீசன், திமுக ஒன்றியச் செயலா் கள்ளூா் கே.ரவி, பொதுக்குழு உறுப்பினா் எஸ்.பி.சக்திதாசன், ஊராட்சி உறுப்பினா்கள் சரஸ்வதி சக்கரபாணி,வில்வநாதன், கீதா விநாயகம், ஆஷாகுப்புசாமி, பிரேமாவதி சுரேஷ், ஊராட்சி செயலா் எஸ்.சுரேஷ்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.