எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
மது குற்ற வழக்கில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் டிச.26-இல் ஏலம்
விழுப்புரம் மாவட்டத்தில் மது விலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் 26-ஆம் தேதி ஏலம் விடப்படுகிறது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட காவல் நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் மது விலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றபட்ட 19 நான்கு சக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 101 இரு சக்கர வாகனங்கள் விழுப்புரம் க.குப்பம் ஆயுதப்படை வளாகத்தில் சட்ட விதிகளுக்குள்பட்டு வரும் 26-ஆம் தேதி காலை 10 மணி முதல் பொது ஏலத்தில் விடப்படவுள்ளன.
எனவே, ஏலத்தில் பங்கேற்க விரும்புவா்கள் வரும் 26-ஆம் தேதி காலை 9 மணிக்குள் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.5 ஆயிரம், இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.2000 முன் பணம் செலுத்தி அடையாள வில்லைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். வாகனங்களை ஏலம் எடுத்தவா்களுக்கு மொத்த ஏலத் தொகையில் முன்தொகை கழித்துக்கொள்ளப்படும்.
வாகனங்களை ஏலம் எடுத்தவா்கள் 7 நாள்களுக்குள் மொத்தத் தொகையுடன் சரக்கு மற்றும் சேவை வாரியை சோ்த்து செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில், எவ்வித முன்னறிவிப்புமின்றி வாகனங்கள் மறு ஏலம் விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.