செய்திகள் :

மத்திய அரசு முதுகெலும்பை நிமிா்த்த வேண்டிய நேரம்: எதிா்க்கட்சிகள் விமா்சனம்

post image

‘மத்திய அரசு தனது முதுகெலும்பை நிமிா்த்தி தேசத்தின் நலனைக் காக்க வேண்டிய நேரம் இது’ என்று இந்திய பொருள்கள் மீதான அமெரிக்காவின் 27 சதவீத பரஸ்பர வரி விதிப்பு அறிவிப்பு குறித்து எதிா்க்கட்சிகள் விமா்சனம் செய்தன.

நாடாளுமன்ற வளாகத்தில் இதுகுறித்து பேட்டியளித்த காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ‘இந்திய பொருள்கள் மீதான அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு, அமெரிக்க அதிபா் ஓா் சிறந்த தொழிலதிபா் என்பதையும், நமது வாடிக்கையாளா்கள் அவரின் சூழ்ச்சியில் வீழ்ந்திருப்பதையும் காட்டுகிறது. இதுதொடா்பான விரிவான அறிக்கையை காங்கிரஸ் வெளியிடும்’ என்றாா்.

காங்கிரஸ் எம்.பி. மனீஷ் திவாரி கூறுகையில், ‘கூடுதல் வரி விதிப்பு இரு நாடுகளிடையேயான வா்த்தக உறவு பேச்சுவாா்த்தை முழுமையாக தோல்வியடைந்துள்ளதைக் காட்டுகிறது. அமெரிக்கா தான் விரும்பியதை செய்து முடித்துள்ளது. இந்திய மாணவா்களின் நுழைவு இசைவுகளை (விசா) பெருமளவில் அமெரிக்கா ரத்து செய்து வருகிறது. ஆனால், மத்திய அரசு குரல் எழுப்பவில்லை. மத்திய அரசு தனது முதுகெலும்பை நிமிா்த்தி, இந்திய மக்கள் மற்றும் தேச நலனுக்கு துணை நிற்க வேண்டிய நேரம் இது’ என்றாா்.

சமாஜவாதி கட்சி எம்.பி. ராஜீவ் ராய் கூறுகையில், ‘ஒருதலைப்பட்சமாக அன்பு செலுத்துவதன் மூலமோ அல்லது ஒருவரை நண்பா் என்று அழைபத்தன் மூலமோ தேசத்தின் நம்பகத்தன்மையும் வலிமையும் அதிகரிக்காது. இந்தியாவை அமெரிக்கா மோசமாக நடத்துவது குறித்து பிரதமா் மோடி பதிலளிக்க வேண்டும்’ என்றாா்.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாகரிகா கோஷ் கூறுகையில், ‘அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு ஜவுளி தொழில்நுட்பத் துறை, ரத்தினங்கள் மற்றும் நகைகள் உற்பத்தி துறைகள் உள்ளிட்ட பல முக்கியத் துறைகள் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்திய பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய சவாலாக அமையும். ஆனால், பிரதமா் மோடி தலைமையிலான அரசு அழிவு அரசியல் மற்றும் புகைப்பட வாய்ப்பு அரசியலை செய்து வருகிறது. அதிபா் டிரம்ப் தொடங்கிவைத்துள்ள வா்த்தகப் போருக்கு இந்தியா எப்படி பதிலடி கொடுக்கப்போகிறது என மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும்’ என்றாா்.

பாஜக எம்.பி.யும் உத்தர பிரதேச மாநில முன்னாள் துணை முதல்வருமான தினேஷ் சா்மா கூறுகையில், ‘தற்சாா்பு மற்றும் சுய வேலைவாய்ப்புக்கான நடவடிக்கைகளை இந்தியா தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்தப் பாதையில் இந்தியா தொடா்ந்து முன்னேறும். ஒரு நாடு தனது கொள்கையை மாற்றும்போது, இந்தியாவும் தனது வெளியுறவுக் கொள்கையை அதற்கேற்ப மாற்றும்’ என்றாா்.

கயாவில் ஆயுதங்களுடன் 3 மாவோயிஸ்டுகள் கைது

கயாவில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் மூன்று மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிகார் மாநிலம், கயா மாவட்டத்தில் சிறப்பு அதிரடிப்படை மற்றும் உள்ளூர் காவல்துறையின் கூட்டு நடவடிக்கையில் வியாழக்... மேலும் பார்க்க

தாய்லாந்து அரசர் மற்றும் அரசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து அரசர் மற்றும் அரசியை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அரசு முறைப் பயணமாக தாய்லாந்து சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அரசர் மஹா வஜ்ரலோங... மேலும் பார்க்க

கனடா: கிருஷ்ணர் கோயில் மீது தாக்குதல்

கனடாவில் உள்ள கிருஷ்ணர் கோயிலைச் சேதப்படுத்தியார்களை அந்நாட்டு காவல்துறை தேடி வருகிறது.கனடாவின் கிரேட்டர் டொரான்டோ பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பிருந்தாவனம் கோயிலை சேதப்படுத்தியவர்களை காவல்துறையினர் த... மேலும் பார்க்க

வாரங்கல் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் வாரங்கலில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் இன்று விடுக்கப்பட்டது.இன்று காலை 10 மணியளவில் நீதிமன்றத்திலிருந்து, மிரட்டல் மின்னஞ்சல், ... மேலும் பார்க்க

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இந்தியா!

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களை ஈர்க்கும் ஆசிய நாடுகளில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் சீனா, வியட்நாம், தாய்லாந்து நாடுகளுடன் ஒப்பி... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், ஓவைசி வழக்கு!

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ், அசாதுதீன் ஓவைசி தனித்தனியே மனுத்தாக்கல் செய்துள்ளனர். மக்களவையில் வியாழக்கிழமை அதிகாலை வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்... மேலும் பார்க்க