செய்திகள் :

மனைவி, மாமியார் சித்ரவதையால் தொழிலதிபர் விபரீத முடிவு... `பிணத்தைப் போல் வாழ்கிறேன்' -தாயார் கண்ணீர்

post image

மனைவியின் துன்புறுத்தல் மற்றும் சித்ரவதை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நான்கு நாள்களுக்கு முன்புதான் மும்பையைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் தனது மனைவியின் சித்ரவதை தாங்காமல் ஆக்ராவில் தற்கொலை செய்து கொண்டார். அந்த சோகம் நீங்குவதற்குள், மும்பையில் மீண்டும் ஒரு துயர சம்பவம் நடந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

நிஷாந்த் திரிபாதி (41) என்பவர் சொந்தமாக தொழில் செய்து வந்தார். அவர் மும்பையில் உள்ள சகாரா என்ற ஹோட்டலில் கடந்த வாரம் அறை எடுத்து தங்கினார். அவர் தனது அறைக்கு சென்றவுடன் தன்னை தொந்தரவு செய்யவேண்டாம் என்ற அறிவிப்பை அறைக்கு வெளியில் தொங்கவிட்டார். அவர் மூன்று நாள்கள் அறையில் தங்கி இருந்தார். ஆனால் அவர் அறைக்குள் சென்று அதிக நேரம் ஆனபிறகும் அவரது கதவு திறக்கப்படவில்லை.

நீலம், நிஷாந்த்

இதனால் சந்தேகம் அடைந்த ஹோட்டல் ஊழியர்கள் தங்களிடம் இருந்த சாவி மூலம் அவரது அறை கதவை திறந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அவர் தற்கொலை செய்திருந்தார். இது குறித்து ஹோட்டல் ஊழியர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

நிஷாந்த் தற்கொலை செய்து ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், அவர் தற்கொலை செய்துகொள்ளும் முன்பாக தனது தற்கொலைக்கு தனது மனைவி அபூர்வா மற்றும் அவரது தாயார் பிரார்தனா ஆகியோர்தான் காரணம் என்று குறிப்பிட்டு இருந்தார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை அவரது கம்பெனி வெப்சைட்டில் பதிவு செய்து வைத்திருந்தார்.

அவர் தனது கடிதத்தை மனைவிக்காக எழுதி இருந்தார். அதில், "நீ இந்த கடிதத்தை படிக்கும் போது நான் உயிரோடு இருக்கமாட்டேன். கடைசி நேரத்தில் நடந்த அனைத்திற்காகவும் உன்னை நான் வெறுத்திருக்கலாம். ஆனால் நான் அதை விரும்பவில்லை. இந்த தருணத்திற்காக அன்பை தேர்வு செய்கிறேன். இப்போது நான் உன்னை காதலிக்கிறேன். நான் உறுதியளித்தபடி எனது அன்பு மங்கப்போவதில்லை. நான் சந்தித்த அனைத்து போராட்டங்கள் மற்றும் எனது மரணத்திற்கு நீயும், உனது தாயாரும் தான் காரணம் என்பதை எனது தாயார் அறிவார். எனவே இப்போது அவரை நீ அணுக வேண்டாம் என்று நான் கெஞ்சிக்கேட்டுக்கொள்கிறேன். ஏற்கெனவே எனது தாயார் போதுமான அளவு உடைந்துவிட்டார். அவள் நிம்மதியாக துக்கப்படட்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்கொலை

இது குறித்து நிஷாந்த் தாயார் நீலம் சதுர்வேதி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் நிஷாந்த் மனைவி அபூர்வா மற்றும் அவரது தாயார் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

நிஷாந்த் தாயா நீலம் தனது பேஸ்புக் பக்கத்தில் தனது மகனின் இறப்பு குறித்து நீண்ட ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில், "இன்றைக்கு நான் பிணம் போல் வாழ்வதாக உணர்கிறேன். எனது வாழ்க்கையை பெண்கள் உரிமை மற்றும் பாலின சம உரிமைக்காக அர்ப்பணித்துக் கொண்டுள்ளேன். இப்போது எனது வாழ்க்கை முடிந்துவிட்டது. எனது மகன் என்னைவிட்டுச் சென்றுவிட்டான். இதனால் பிணமாக வாழ்கிறேன். எனக்கு எனது மகன் இறுதிச்சடங்கு செய்வான் என்று நினைத்தேன். ஆனால் இன்றைக்கு நான் எனது மகனை தகனம் செய்துவிட்டு வந்திருக்கிறேன். எனது மகள் பிராச்சி என் மகனின் இறுதிச்சடங்கை செய்தார். எனக்கும் என் மகள் பிராச்சிக்கும் தைரியம் கொடுங்கள், அதனால் நான் இவ்வளவு பெரிய இழப்பை தாங்க முடியும்...” என்று அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.

தற்கொலைத் தடுப்பு மையம்

திண்டுக்கல்: மாந்தோப்பில் சுற்றித்திரிந்த குரங்கை சுட்டுக் கொன்று சாப்பிட்ட இருவர் கைது

திண்டுக்கல் மாவட்டம் வீர சின்னம்பட்டியில் மாந்தோப்பில் தொல்லை செய்த குரங்கை பணம் கொடுத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல கூறிய தோட்டத்துக்காரர், அதை கொன்று வீட்டிற்கு எடுத்து வந்து சமைத்து சாப்பிட்ட தொ... மேலும் பார்க்க

Kerala: போலீஸாரிடம் சிக்காமல் இருக்க MDMA போதைப்பொருள் பாக்கெட்டை விழுங்கிய இளைஞர் மரணம்

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரியை சேர்ந்த இளைஞர் இய்யாடன் ஷானித் (28). இவர் நேற்று முன்தினம் சாலை ஓரத்தில் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் தாமரச்சேரி போலீஸ... மேலும் பார்க்க

``திருமணம் மீறிய உறவு; வேறு ஒருவருடன் தொடர்பு..'' - பெண்ணை கொன்ற இளைஞர் பகீர் வாக்குமூலம்

நாமக்கல் மாவட்டம், வெப்படையில் இளம்பெண் ஒருவர் வீட்டில் கழுத்தறுக்கபட்ட நிலையில் மர்மமாக இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. அந்த தகவலையடுத்து, வெப்படை காவல் நிலைய போலீஸார் சம்பவம் நடைபெற்ற இட... மேலும் பார்க்க

விருதுநகர்: `தனியார் பார்களில் லஞ்சம்..' - பணத்தோடு சிக்கிய கலால் வரித்துறை உதவி ஆணையர்

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் (வயது 58) என்பவர், விருதுநகர் மாவட்டத்தில், கலால் வரித்துறை உதவி ஆணையராக பணியாற்றி வருகிறார். இவர் விருதுநகர் மாவட்ட தனியார் மெத்தனால் ஆய்வகங்கள் மற்றும் பார்களில்... மேலும் பார்க்க

லாரியை மறித்து பணத்தை பிடுங்கிய ஆர்.டி.ஓ அலுவலக டிரைவர், புரோக்கர் கைது..

தஞ்சாவூரில் சில தினங்களுக்கு முன்பு ஜல்லி ஏற்றி வந்த லாரியை காரில் வந்த இருவர் மறித்துள்ளனர். காரை ஓட்டி வந்தவர் காருக்குள் ஆர்.டி.ஓ இருக்கிறார் லாரி எங்கிருந்து வருகிறது, பர்மிட் இருக்கா என கேட்டுள்ள... மேலும் பார்க்க

நண்பனை கொலை செய்து சடலத்தை கால்வாயில் வீசிச் சென்ற இளைஞர்... சென்னையில் நடந்த கொடூரம்

சென்னை கொருக்குப்பேட்டை, பி.பி.சி.எல் (BPCL) சுற்றுசுவர் அருகில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார் என்பவர் கடந்த 5-ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது பி.பி.சி.எல் காம்பவுன்ட் சுவர... மேலும் பார்க்க