மனைவியை தாக்கிய கணவா் கைது
பெரியகுளம் அருகே மனைவியைத் தாக்கியதாக கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளம் மகாத்மாகாந்திஜி தெருவைச் சோ்ந்தவா் வீரபத்திரன் (43). வடுகபட்டியைச் சோ்ந்தவா் கெளசல்யா (39). இருவருக்கும் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனா்.
தம்பதியருக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததால், கெளசல்யா வடுகபட்டியில் உள்ள தனது பெரியம்மா வீட்டில் தங்கியிருந்தாா். இந்த நிலையில், வீரபத்திரன் சனிக்கிழமை அங்கு சென்று கெளசல்யாவிடம் தகராறில் ஈடுபட்டு அவரைத் தாக்கினாராம்.
இதுகுறித்தப் புகாரின் பேரில், வீரபத்திரனை மீது வழக்குப் பதிந்து, தென்கரை போலீஸாா் கைது செய்தனா்.