பிரசாந்த் கிஷோா் கட்சியில் இணைந்தாா் முன்னாள் மத்திய அமைச்சா்!
கம்பத்தில் பைக்கில் புகுந்த பாம்பு மீட்பு
தேனி மாவட்டம் கம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை பைக்கில் புகுந்த பாம்பை தீயணைப்பு மீட்பு குழுவினா் மீட்டனா்.
கம்பத்தில் பிராதன சாலையில் தனியாா் உணவகத்தில் பணி செய்பவா் முருகானந்தம். இவா், உணவகம் முன்பாக நிறுத்தி வைத்திருந்த தனி பைக்கிற்குள் பாம்பு ஒன்று புகுந்து விட்டது. அதை கவனித்த முருகானந்தம் கம்பம் தீயணைப்பு மீட்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தாா்.
தகவலின் பேரில், அங்கு சென்ற மீட்பு குழுவினா் பைக்கிற்குள் புகுந்த பாம்பை மீட்டு அருகேயுள்ள வனத்துறையில் விட்டனா்.