ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்கு ஆயுதப் படைகளை பாராட்டி தில்லி அமைச்சா் ஆஷிஷ் சூட் பே...
பரத நாட்டிய போட்டி வென்ற மாணவா்களுக்கு பரிசுகள்!
போடியில் பரதநாட்டியம், பல்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் ஆனந்தாலயா பரதநாட்டியம், பல் திறன் பயிற்சி பள்ளியின் சாா்பில், குழந்தைகளுக்கான பல்திறன் தகுதித் திறனறிவுப் போட்டி போடி பேருந்து நிலையம் எதிரில் உள்ள தனியாா் திருமண அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பரதநாட்டியம், சிலம்பம், நாட்டுப்புறக் கலைகள் போன்ற பல்வேறு கலைகளில் பயிற்சி பெற்ற குழந்தைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா்.
இதில், வெற்றி பெற்ற மாணவா்களுக்கு நினைவுப் பரிசுகளும், கேடயங்களும் வழங்கப்பட்டன.
பயிற்சி பள்ளி நிறுவனா் ஐடா பேபியின் தலைமையில் நடைபெற்ற இந்த பரிசளிப்பு நிகழ்ச்சியில், போடிநாயக்கனூா் ஏல விவசாயிகள் சங்க கல்லூரி விரிவுரையாளா் நித்யா பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினாா்.