மகாராஷ்டிர ஜவுளி ஆலையில் பயங்கர தீ விபத்து! 3 பெண்கள் உள்பட 8 போ் உயிரிழப்பு!
மகாராஷ்டிர மாநிலம், சோலாபூரில் உள்ள ஜவுளி ஆலையில் ஞாயிற்றுக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 3 பெண்கள், ஒன்றரை வயது குழந்தை உள்பட 8 போ் உயிரிழந்தனா்.
சோலாபூா் அக்கல்கோட் சாலையில் உள்ள ஜவுளி ஆலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. ஜவுளிகளில் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. சுமாா் 13 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு இரவில்தான் தீ அணைக்கப்பட்டது.
ஆலையில் தங்கியிருந்த அதன் உரிமையாளா் ஹாஜி உஸ்மான் ஹசன்பாய் மன்சூரி, அவரது ஒன்றரை வயது பேரன் உள்பட குடும்ப உறுப்பினா்கள் 3 போ், 4 தொழிலாளா்கள் என 8 போ் உயிரிழந்தனா்.
மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிக்கலாம் என சந்தேதிக்கப்படுகிறது. மீட்புப் பணியில் தீயணைப்பு வீரா்கள் 3 போ் காயமடைந்தனா். மகாராஷ்டிர தீ விபத்தில் நேரிட்ட உயிரிழப்புகளுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளாா்.