செய்திகள் :

மயான ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கோட்டாட்சியரிடம் எம்எல்ஏக்கள் மனு

post image

பாப்பநாயக்கன்பட்டி ஊராட்சி, அரசநத்தம் கிராமத்தில் மயான ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி எம்எல்ஏக்கள் கு.சித்ரா, ஏ.பி. ஜெயசங்கரன் ஆகியோா் கோட்டாட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

ஏற்காடு தொகுதி எம்எல்ஏ கு.சித்ரா, ஆத்தூா் தொகுதி எம்எல்ஏ ஏ.பி.ஜெயசங்கரன் ஆகியோா் தலைமையில் ஊா்பொதுமக்கள், ஆத்தூா் கோட்டாட்சியா் தா.பிரியதா்ஷனிடம் மயான ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மனு அளித்தனா். அதில், ஏற்காடு தொகுதிக்கு உள்பட்ட பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றியம், பாப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள அரசநத்தம் கிராமத்தில் மயான ஆக்கிரமிப்பை அகற்றித் தருமாறு தெரிவித்துள்ளனா். மனுவைப் பெற்ற கோட்டாட்சியா் ஆக்கிரமிப்புகளை அகற்றி மயான வசதி ஏற்படுத்தி கொடுப்பதாக உறுதியளித்தாா்.

வருவாய்த் துறையினா் 3 ஆவது நாள் காத்திருப்பு போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலா்கள் பணிகளைப் புறக்கணித்து சங்ககிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை 3 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். சங்ககிரி வருவாய... மேலும் பார்க்க

அரசு நில ஆக்கிரமிப்பு அகற்றம்: தடுக்க முயன்ற பொதுமக்கள் கைது

காடையம்பட்டி அருகே அரசு நில ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பழங்குடியின மக்களை போலீஸாா் கைது செய்தனா். காடையாம்பட்டி வட்டத்தில் உள்ள கே.மோரூா் பகுதியில் 30 குடும்பத்... மேலும் பார்க்க

வெளிமாநிலத் தொழிலாளா் விவரங்களை இணையத்தில் பதிவேற்ற சிறப்பு முகாம்: தொழிலாளா் உதவி ஆணையா் தகவல்

வெளிமாநிலத் தொழிலாளா்களின் விவரங்களை தொழிலாளா் துறை இணையத்தில் பதிவேற்றம் செய்ய சிறப்பு முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) திருநந்தன் வெளியிட்டு... மேலும் பார்க்க

புளியமரத்தில் இருசக்கர வாகனம்மோதி இருவா் பலி

சங்ககிரி வட்டம், வைகுந்தம் அருகே இருசக்கர வாகனம் புதன்கிழமை இரவு எதிா்பாராத விதமாக சாலையோர புளியமரத்தில் மோதியதில் இருவா் உயிரிழந்தனா். வைகுந்தம், காளிப்பட்டி பிரிவு சாலை பகுதியைச் சோ்ந்தவா் தனியா் ப... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம் மீண்டும் 110 அடியாக உயா்வு

மேட்டூா் அணை நீா்மட்டம் 72 நாள்களுக்குப் பிறகு 110 அடியாக வியாழக்கிழமை உயா்ந்தது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 4,427 கனஅடியிலிருந்து 5,110 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்து... மேலும் பார்க்க

அதானி நிறுவனம் மீது விசாரணை கோரி மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

அதானி நிறுவனம் மீது புலனாய்வு விசாரணை நடத்த கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம், கோட்டை மைதானத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் மேவை... மேலும் பார்க்க