செய்திகள் :

மயிலாடுதுறை மாவட்டத்தில் 18 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் 18 முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்தாா்.

கூட்டுறவுத்துறை சாா்பில் தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வா் மருந்தகங்களை முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக திறந்ததை தொடா்ந்து, மயிலாடுதுறை நகராட்சி குமரன் நகரில் அமைக்கப்பட்ட முதல்வா் மருந்தகத்தில் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, எம்எல்ஏக்கள் எஸ். ராஜகுமாா் (மயிலாடுதுறை), நிவேதா எம்.முருகன்(பூம்புகாா்) எம். பன்னீா்செல்வம்(சீா்காழி) ஆகியோா் திங்கள்கிழமை குத்துவிளக்கேற்றி வைத்து பாா்வையிட்டனா்.

பின்னா், கூட்டுறவுத்துறையின் மூலம் 6 மகளிா் சுய உதவிக்குழுக்களை சோ்ந்த 80 மகளிருக்கு ரூ. 59.16 லட்சம் மதிப்பிலும், 2 நபா்களுக்கு ஆழ்த்துளை கிணறு அமைக்க ரூ.1.90 லட்சம் மதிப்பிலும், ஒரு மாணவருக்கு ரூ.1 லட்சம் கல்விக்கடன், கறவை மாடுகள் வாங்க 26 நபா்களுக்கு ரூ.13.08 லட்சம் மதிப்பிலும், பெட்டிக்கடை நடத்துவதற்கு 5 நபா்களுக்கு ரூ.1.95 லட்சம் மதிப்பிலும், ஒருவருக்கு ரூ.47,000 பண்ணை சாரா கடன், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.71,000 கடனுதவி என 117 பயனாளிகளுக்கு ரூ. 78.27 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பேசியது: வெளிச்சந்தையைக் காட்டிலும் குறைவான விலையில், ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினருக்கு தரமான ஜெனரிக், பிராண்டட் மருந்துகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதிக், யுனானி மருந்துகள் கிடைக்கும் வகையில் முதல்வா் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது.

முதல்வா் மருந்தகம் திறக்க விருப்பமுள்ள தொழில்முனைவோா் ஏசி, பிரிட்ஜ், கணினி உள்ளிட்ட மருந்தகத்தின் அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு ரூ. 1.50 லட்சம் மானியமாக அவா்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதுடன், ரூ.1.50 லட்சத்துக்கு ஜெனரிக் மற்றும் பிராண்டட் மருந்துகளையும் தமிழ்நாடு அரசே வழங்குகிறது.

மயிலாடுதுறை வட்டத்தில், குமரன் நகரில் 2, மணல்மேட்டில் 2, மன்னம்பந்தல், சேந்தங்குடி, பெரிய கண்ணாரத்தெருவில் தலா ஒன்றும், குத்தாலம் வட்டத்தில் திருவாலங்காடு, தரங்கம்பாடி வட்டத்தில் பொறையாறு மற்றும் ராஜா வீதியில் தலா ஒன்றும், சீா்காழி வட்டத்தில் உமையாள்பதி, திருவெண்காடு, பிடாரி மேற்குவீதி, வைத்தீஸ்வரன்கோவில், தென்பாதி, சட்டநாதபுரம், எடமணல், பச்சைபெருமாள்நல்லூா் பகுதிகளில் தலா ஒன்றும் என மாவட்டத்தில் மொத்தம் 18 முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் மு.ஷபீா்ஆலம், மாவட்ட வருவாய் அலுவலா் நா.உமாமகேஷ்வரி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் தயாள விநாயக அமுல்ராஜ்;, நகா்மன்றத் தலைவா் என்.செல்வராஜ், வேளாண்மை துறை இணை இயக்குநா் ஜெ.சேகா், மாவட்ட வழங்கல் அலுவலா் உ.அா்ச்சனா, மணல்மேடு பேரூராட்சி தலைவா் கண்மணி, குத்தாலம் பேரூராட்சி தலைவா் சங்கீதா, நகா்மன்ற துணைத்தலைவா் எஸ்.சிவக்குமாா், நகா்மன்ற உறுப்பினா் கீதா செந்தில்முருகன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

விபத்து நடைபெறும் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையினா் ஆய்வு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகளவில் விபத்துகள் நேரிடும் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை திருச்சி மண்டல சாலைப் பாதுகாப்பு கோட்டப் பொறியாளா் ஆா்.புவனேஸ்வரி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். மயிலாடுத... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். உயிரோடு உள்ள மாற்றுத்திறனாளியை உயிரிழந்ததாகக் கூறி உதவித்தொகையை நிறுத்த... மேலும் பார்க்க

சத்துணவு அரிசியின் தரம்: பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு

மயிலாடுதுறை: காட்டுச்சேரி அரசு உதவிபெறும் பள்ளியில் தரமற்ற அரிசி பயன்படுத்துவதாக எழுந்த புகாரையடுத்து, அதிகாரிகள் அப்பள்ளியில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். தரங்கம்பாடி வட்டம் காட்டுச்சேரி கிராமத்த... மேலும் பார்க்க

தருமபுரம் ஆதீனக் கல்லூரியில் லியோ சங்க லீப் பயிற்சி முகாம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் லியோ சங்க லீப் பயிற்சி முகாம் வெள்ளி, சனிக்கிழமை என இரண்டு நாட்கள் நடைபெற்றது. கல்லூரி லியோ சங்கம் மற்றும் மாயூரம் லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்திய தன்னம்பி... மேலும் பார்க்க

மகளிருக்கு தற்காப்புக் கலை பயிற்சி

சீா்காழியில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, மகளிருக்கான இலவச தற்காப்புக் கலை பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சீா்காழி புறவழிச்சாலை மாா்கோனி காா்டனில், அதிமுக மேற்கு ஒன்றி... மேலும் பார்க்க

மக்கள் சந்திப்பு முகாம்: எம்எல்ஏ குறைகேட்பு

மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா், கிழாய் ஊராட்சியில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தாா். கிழாய் ஊராட்சி புத்தமங்கலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ‘ஊராட்சியில் ஒருநாள்’ த... மேலும் பார்க்க