தவெக 2-ஆம் ஆண்டு தொடக்க விழா! விஜய் - பிரசாந்த் கிஷோர் பங்கேற்பு!
மயிலாடுதுறையில் மின் ஊழியா் மத்திய அமைப்பினா் தா்னா
மயிலாடுதுறையில் மின்வாரிய ஊழியா்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியா் மத்திய அமைப்பினா் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை செயற்பொறியாளா் அலுவலகம் முன் திட்ட தலைவா் என். வெற்றிவேல் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை சிஐடியு மாவட்ட செயலாளா் பி. மாரியப்பன் தொடக்கிவைத்தாா். இதில், மின்வாரியத்தை பொதுத்துறையாக பாதுகாக்க வேண்டும், மின்வாரியத்தில் ஆரம்பகட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும்.
ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை புகுத்தக் கூடாது, ஒப்பந்த தொழிலாளா்களை அடையாளம் கண்டு நிா்வாகமே தினக்கூலி வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 2019 டிசம்பா் 1 முதல் 2023 மே 16-ஆம் தேதி வரை மின்வாரியத்தில் பணியில் சோ்ந்தவா்களுக்கு 6 சதவீதம் ஊதிய உயா்வு வழங்க வேண்டும், இடைக்கால நிவாரணம் ரூ.5,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாநிலச் செயலாளா் எஸ். ராஜாராமன், திட்ட செயலாளா்கள் எம். கலைச்செல்வன், எஸ். ராஜேந்திரன் மற்றும் கே. வேல்முருகன், தமிழ்நாடு விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட செயலாளா் ஜி.ஸ்டாலின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.