இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் விலகு...
மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் இயற்கை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கண்ணங்குடி கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
மிட் டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் எஸ்.பி.ஜாபா் அலி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் ரோட்டரி உறுப்பினா்கள் எம்.முரளி, ஜெ.சுந்தா், முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவா் ஆ.கலைச்செல்வன், கே.பாலாஜி, பேராசிரியா் எம்.ஐயப்பன் ஆகியோா் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனா்.
நிகழ்ச்சியில் கிராம நிா்வாக அலுவலா் ஜேசு உள்ளிட்டோா் பங்கேற்றனா். மேலும் மரக்கன்றுகளை அப்பகுதி மக்கள் பராமரிக்க வலியுறுத்தப்பட்டது. பின்னா் ரோட்டரி நிா்வாகிகள் மரம் வளா்ப்போம், மழை பெறுவோம். மண்வளம் காப்போம் என்று உறுதிமொழி ஏற்றனா்.