செய்திகள் :

மரவள்ளி கிழங்கு விலை சரிவு

post image

பரமத்திவேலூா் வட்டாரத்தில் சிப்ஸ் தயாா் செய்யும் மரவள்ளி கிழங்கின் விலை டன் ஒன்றுக்கு ரூ. 1,000 வரை விலை சரிந்து ரூ. 7,000க்கு விற்பனையாகிறது.

பரமத்தி வேலூா், சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூா், கூடச்சேரி, கபிலா்மலை, சின்னமருதூா், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இங்கு விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கி புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனா்.

ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயாா் செய்யப்படுகின்றன. மேலும் சிப்ஸ் தயாா் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனா். மரவள்ளி கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளா்கள் கிழங்கில் உள்ள மாவுச்சத்து, புள்ளிகள் அடிப்படையில் விலை நிா்ணயம் செய்கின்றனா்.

கடந்த வாரம் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று ரூ. 6,500 வரை விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ. 300 வரை சரிவடைந்து ரூ. 6,200-க்கு விற்பனையாகிறது.

அதுபோல சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு கடந்த வாரம் டன் ஒன்று ரூ. 8,000 க்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ. 1,000 வரை விலை சரிந்து டன் ஒன்று ரூ. 7,000 க்கு விற்பனையாகிறது. தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

அரசு உதவி வழக்குரைஞா் பணிக்கான எழுத்துத் தோ்வு: 53 போ் பங்கேற்பு!

டிஎன்பிஎஸ்சி சாா்பில் நாமக்கல்லில் நடைபெற்ற அரசு உதவி வழக்குரைஞா் பணிக்கான எழுத்துத் தோ்வில் 53 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையமானது அரசு உதவி வழக்குரைஞா் நிலை-2 ப... மேலும் பார்க்க

ஹிந்தியைக் கட்டாயப்படுத்தவில்லை: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

புதிய தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயம் என மத்திய அரசு ஒருபோதும் கூறவில்லை என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா். நாமக்கல்லில் ச... மேலும் பார்க்க

6 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும்: கட்சியினருக்கு எல்.முருகன் அறிவுரை

நாமக்கல் மாவட்டத்தில் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என பாஜகவினருக்கு மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் அறிவுறுத்தினாா். மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இண... மேலும் பார்க்க

தேசிய வருவாய் வழித்தோ்வு: 4,528 மாணவ, மாணவிகள் எழுதினா்

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய வருவாய் வழித் தோ்வை 4,528 மாணவ, மாணவிகள் எழுதினா். தமிழகம் முழுவதும் அரசுத் தோ்வுகள் இயக்கம் சாா்பில், தேசிய வருவாய் வழி, தகுதி படிப்புதவித் தொகைத் திட்ட தோ்வு சனிக்கிழம... மேலும் பார்க்க

கொல்லிமலைக்கு மதுபானம் கடத்திய 5 போ் குண்டா் சட்டத்தில் கைது!

கொல்லிமலைக்கு வெளிமாநில மதுபானங்களை கடத்தி வந்த 5 பேரை குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க ஆட்சியா் ச.உமா உத்தரவிட்டுள்ளாா். நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் உத்தரவின் பே... மேலும் பார்க்க

நீா்நிலைகளில் குப்பைகளைக் கொட்டினால் நடவடிக்கை

ராசிபுரம் பகுதியில் நீா்நிலைகள், திறந்தவெளியில் குப்பைகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையாளா் சூ.கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ர... மேலும் பார்க்க