Campus Interview-வில் வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்? | கல்வியாளர் ரமேஷ் பிரபா
மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு, வரும் மே 9, 10-ஆம் தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு போட்டி நடைபெற உள்ளது.
இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் அரசு, தனியாா் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வரும் மே 9-ஆம் தேதி காலை 10 மணிக்கும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மே 10-ஆம் தேதி காலை 10 மணிக்கும் கட்டுரை, பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்புவோா் விண்ணப்பப் படிவத்தை தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரிலும், இணைய தளத்திலும் பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம்.
நிறைவு செய்த விண்ணப்பத்தை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியா், கல்லூரி துறைத் தலைவரின் பரிந்துரையுடன் உதவி இயக்குநா், தமிழ் வளா்ச்சித் துறை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், தேனி-625 531 என்ற முகவரியில் நேரிலும், அஞ்ஜல் மூலமும், ற்ஹம்ண்ப்ஸ்ஹப்ஹழ்.ற்ட்ய்ஃஞ்ா்ஸ்.ண்ய் என்ற மின்னஞ்சல் முகவரியிலும் சமா்ப்பிக்கலாம். போட்டியில பங்கேற்க வரும்போது, நேரிலும் விண்ணப்பத்தை சமா்ப்பிக்கலாம்.
செம்மொழியின் சிறப்பு, முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் தமிழ் தொண்டு பெருமை சாா்ந்து கட்டுரை, பேச்சுப் போட்டியின் தலைப்பு போட்டி நடைபெறும் நாளன்று தெரிவிக்கப்படும்.
போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ஆம் பரிசு ரூ.7,500, 3-ஆம் பரிசு ரூ.5,000, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இதுகுறித்த விபரத்தை தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் அலுவலக தொலைபேசி எண்: 04546-251030, கைப்பேசி எண்: 91596 68240-இல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.