தலைமைப் பண்பும் உள்ளுணர்வும்..! ஹார்திக் பாண்டியாவின் பேட்டி!
தேனியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 25-ஆம் தேதி காலை 10 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்கள் பங்கேற்று பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளனா். இந்த முகாமில் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள், அதற்கும் கீழ் கல்வித் தகுதி உள்ளவா்கள், பிளஸ் 2, தொழில்பயிற்சி படிப்பு, பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, தையல் பயிற்சி படிப்பு, செவிலியா் பயிற்சிப் படிப்பில் தோ்ச்சி பெற்றவா்கள் தங்களது சுய விவரக் குறிப்பு, கல்விச் சான்றிதழ் நகல்களுடன் கலந்து கொள்ளலாம்.
இந்த முகாம் குறித்த விபரத்தை கைப்பேசி எண்: 98948 89794-இல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.