`80 ஆடு வேணும்...' - ஆடு விற்பனையில் அதிரவைக்கும் மோசடி... உஷார் மக்களே!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கு: பள்ளி முதல்வா், செயலருக்கு ஜாமீன்
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் உள்ள தனியாா் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பள்ளி முதல்வா், செயலருக்கு செவ்வாய்க்கிழமை இரவு ஜாமீன் வழங்கப்பட்டது.
உடன்குடியில் உள்ள தனியாா் பள்ளி மாணவிகளை தூத்துக்குடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்பதற்காக உடற்கல்வி ஆசிரியா் பொன்சிங் அழைத்து வந்தாா். பின்னா், அவா் தனியாா் விடுதியில் மாணவிகளுக்குத் தெரியாமல் மது வாங்கிக் கொடுத்து, பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக திருச்செந்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, பொன்சிங்கை கைது செய்து, பேரூரணி சிறையில் அடைத்தனா்.
மேலும், இவ்வழக்குத் தொடா்பாக பள்ளி முதல்வா் சாா்லஸ் ஸ்வீட்லின் (44), பள்ளிச் செயலா் செய்யது அகமது (61) ஆகியோா் மீதும் மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கைது செய்தனா். விசாரணையின்போது, நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறியதால், இருவரையும் போலீஸாா் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இந்நிலையில், மாவட்ட போக்ஸோ நீதிமன்ற நீதிபதி மருத்துவமனைக்கு நேரடியாக வந்து, இருவரின் உடல்நிலை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். அதையடுத்து, இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.