Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
மாத முதலீடு முதல் மாதாமாத பென்ஷன் வரை! உங்களுக்கு சொல்லித்தரப் போறோம்! #LabhamWebinar
ஹாய்! எப்படி இருக்கீங்க?
விலைவாசி உயர்வு - நம் பணத்தின் மதிப்பைக் குறைக்கும் சைலன்ட் கில்லர். வருஷா வருஷம் வலுவ்வா கிடுக்கிப்பிடி போட்டு, நம்மைக் கதிகலங்க வைப்பதுதான் இந்த சைலன்ட் கில்லரின் வேலையே. போன வருஷம் கட்டுன ஸ்கூல் ஃபீஸ் திடீர்னு 10% அதிகம் கட்ட சொன்னா நாம எங்க போறது? பெட்ரோல் விலையையும் அப்பப்போ ஏத்திவிட்டு நம்மளை கதற விடுறாங்க. மருத்துவ செலவு முதல் மால் செலவு வரை எல்லாமே எப்போதும் விலை உயர்ந்துட்டேதான் போகுது. குடும்பத்தை நடத்துவது, ஐ.நா சபையை நடத்துற மாதிரி பயங்கர டஃபா போகுதுன்னு நீங்க ஃபீல் பண்றீங்களா?

நீங்க செய்ய வேண்டியது இதுதான்...
'நாடென்ன செய்தது நமக்கு எனக் கேள்விகள் கேட்பது எதற்கு, நீயென்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு!' இப்படி ஒரு பழைய பாட்டு இருக்கு. நாட்டுக்கு நான் என்ன செய்றதுன்னு கேக்குறீங்களா? நீங்க ஒன்னும் செய்ய வேணாம். ஆனா இந்தக் காலத்துல, உங்களுக்காக நீங்க சில விஷயங்களை செஞ்சுதான் ஆகணும்!
முதல்ல சேமிப்பு. சம்பளத்தின் 10% - 50% வரை உங்களால எவ்ளோ சேமிக்க முடியுமோ, அதை சேமிக்கணும். விலைவாசிங்கிற குதிரையை முந்த அதைவிட வேகமா நம்ம பணத்தை ஓட வைக்கணும். எனவே, சேமிச்ச பணத்தை நல்ல இடங்கள்ல முதலீடு பண்ணனும். முதலீடு பண்ணா மட்டும்தான் நம்ம பணம் விலைவாசியைத் தாண்டி வளரும். பின்னர் முதலீட்டில் இருந்து கிடைக்கும் பணத்தை சரியாக நிர்வகிச்சு உங்களுக்கு தேவையானப்ப எல்லாம் எடுத்துக்குலாம்!
சரி எங்க, எப்படி, எவ்ளோ முதலீடு பண்ணனும்?
இந்தக் கேள்வி எழுதா? விகடன் 'லாபம்' மூலம் நீங்க உங்க பணத்தை ஈஸியா மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு பண்ண முடியும்! ஆனா அதுக்கு முன்னாடி நீங்க மியூச்சுவல் ஃபண்டின் சாதக பாதகங்களை தெரிஞ்சுக்கணும் இல்லியா? மியூச்சுவல் ஃபண்டில் மாசாமாசம் (இல்லைனா குறிப்பிட்ட தேதியில்) பணம் போடும் SIP, ஒரு ஸ்கீமில் இருந்து இன்னொரு ஸ்கீமுக்கு பணத்தை மாற்றும் STP, ஓய்வுக்கால பென்ஷனை உருவாக்க உதவும் SWP - இதையெல்லாம் பத்தி விலாவாரியாக தெரிஞ்சுக்க விகடன் 'லாபம்' நடத்தும் வெபினாரில் கலந்துக்கோங்க!

தலைப்பு: SIP முதல் SWP வரை
நாள்: ஞாயிறு, ஜூன் 08, 2025
நேரம்: காலை 11 மணி - 12.30 மணி
பேச்சாளர்கள்: ஹசன் அலி, நிறுவனர், எஸ்.ஐ.பி டைகர் & ஏ.ஆர். குமார், சீஃப் ஆஃப் கன்டென்ட், லாபம் & நாணயம் விகடன் முன்னாள் இணை ஆசிரியர்.
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நீங்க கட்டணம் ஏதும் செலுத்த வேணாம். இந்த நிகழ்ச்சியில் 150 நபர்களுக்கு மட்டுமே அனுமதி, அதனால முன்பதிவு கட்டாயம். (குறிப்பு: புதிதாக முதலீட்டை ஆரம்பித்தவர்கள் & இனி ஆரம்பிக்க இருப்பவர்களுக்கு இந்த வெபினார் அதிக பயனுள்ளதாக இருக்கும்.)
ரெஜிஸ்டர் செய்ய: https://forms.gle/YRy5HT8ZGEybbKzB8