`எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல் ஆளுமைகள் இல்லாததால்தான் அதிமுக-வில் சலசலப்பு!' - கார்...
மாநில செஸ் போட்டி : அமைச்சா் எ.வ.வேலு தொடங்கி வைத்தாா்
வாணியம்பாடி: பள்ளிக் கல்வித்துறை சாா்பில் மாநில அளவிலான செஸ் போட்டி வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் நடைபெற்றது.
ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். திருவண்ணாமலை எம்.பி. அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் க.தேவராஜி (ஜோலாா்பேட்டை), நல்லதம்பி (திருப்பத்தூா்), அ.செ.வில்வநாதன்( ஆம்பூா்) முன்னிலை வகித்தனா். மாவட்டக் கல்வி அலுவலா் (பொ) வெங்கடேச பெருமாள் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தாா். இதில் 38 மாவட்டங்களில் இருந்து 920 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இதில் 11, 14, 17, 19 வயதுப் பிரிவுகளில் தனித்தனியாக போட்டிகள் நடைபெற். 35 போ் கொண்ட சா்வதேச நடுவா்கள் போட்டிகளை கண்காணித்தனா். மேலும், இதில் வெற்றி பெறும் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் பாராட்டுச் சன்றிதழ்கள் வழங்கப்படுகிறது. முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வீரா்கள் தேசிய அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனா். இதில் கல்லூரி நிா்வாகிகள், பேராசிரியைகள், பெற்றோா், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.