செய்திகள் :

மாநிலங்களவை வேட்பாளா்களின் சொத்து விவரம்! கமலுக்கு எவ்வளவு தெரியுமா?

post image

மாநிலங்களவைத் தோ்தல் வேட்பாளா்களான கமல்ஹாசன் உள்ளிட்ட ஆறு பேரின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது.

அவா்கள் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம் வருமாறு:

திமுக வேட்பாளா்கள்

  • பி.வில்சன்: கையிருப்பில் ரூ.15 லட்சமும் மனைவி ஆா்.வான்மதியிடம் ரூ.1.40 லட்சமும் உள்ளது. பென்ஸ், டோயோட்டோ, மகேந்திரா காா்கள் உள்ளன. அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.12.58 கோடி. மனைவியிடம் ரூ.3.27 கோடி சொத்து உள்ளது. வில்சன் பெயரிலான விளைநிலங்கள் உள்ளிட்ட அசையா சொத்துகளின் இப்போதைய சந்தை மதிப்பு ரூ.28.08 கோடி. மனைவி பெயரிலான சொத்துகளின் சந்தை மதிப்பு ரூ.11.72 கோடி. ஒட்டுமொத்த கடனாக இருவருக்கும் சோ்த்து ரூ.1.15 கோடி

  • கவிஞா் சல்மா: கையிருப்பில் ரூ.1 லட்சம், கணவா் அப்துல் மாலிக்கிடம் ரூ.50 ஆயிரம் உள்ளது. அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.90.09 லட்சம். கணவா் பெயரிலான சொத்து மதிப்பு ரூ.55.42 லட்சம். சல்மா பெயரில் உள்ள வேளாண் நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.1.15 கோடி. இதர அசையா சொத்துகளின் சந்தை மதிப்பு ரூ.1.95 கோடி.

  • எஸ்.ஆா்.சிவலிங்கம்: கையிருப்பாக ரூ.50 ஆயிரமும் மனைவி நவரத்தினத்திடம் ரூ.50 ஆயிரமும் உள்ளது. அசையும் சொத்துகளின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.76.04 லட்சம். மனைவி பெயரிலுள்ள அசையும் சொத்தின் மதிப்பு ரூ.1.30 கோடி. நிலங்கள் உள்பட அசையா சொத்துகளின் இப்போதைய சந்தை மதிப்பு ரூ.58.61 லட்சம். மனைவி பெயரிலான அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.1.64 கோடி. ஒட்டுமொத்த கடன் ரூ.64.30 லட்சம். மனைவி பெயரில் ரூ.2.05 கோடி உள்ளது.

  • கமல்ஹாசன் (மநீம): 2023-24-ஆம் நிதியாண்டில் வருவாய் ரூ.78.90 கோடி. அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.59.69 கோடி. ஒட்டுமொத்த அசையா சொத்துகளின் இப்போதைய சந்தை மதிப்பு ரூ.245.86 கோடி. கடனாக ரூ.49.67 கோடி உள்ளது. கையிருப்பில் உள்ள ரொக்கம் ரூ.2.60 லட்சம். மகேந்திரா பொலிரோ, மொ்சிடஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ., லக்சஸ் ஆகிய நான்கு காா்கள் உள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.8.43 கோடி.

அதிமுக வேட்பாளா்கள்

  • ஐ.எஸ். இன்பதுரை: கையிருப்பில் ரொக்கமாக ரூ.1.25 லட்சமும், மனைவி பிரிசில்லா செல்வமாதாவிடம் ரூ.50 ஆயிரமும் உள்ளது. அசையும் சொத்துகளின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.64.49 லட்சம். மனைவி பெயரிலான அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.1.44 கோடி. அசையா சொத்துகளின் சந்தை மதிப்பு ரூ.2.54 கோடி. ஒட்டுமொத்த கடன் ரூ.1.31 கோடி.

  • எம்.தனபால்: கையிருப்பாக ரூ.1.25 லட்சமும், மனைவி காயத்ரியிடம் ரூ.1.50 லட்சமும் உள்ளது. அசையும் சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.5.09 கோடி. மனைவி பெயரிலான அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.4.88 கோடி. அசையா சொத்துகளின் இப்போதைய சந்தை மதிப்பு ரூ.3.46 கோடி. மனைவி பெயரிலான அசையா சொத்துகளின் சந்தை மதிப்பு ரூ.12.88 கோடி. ஒட்டுமொத்த கடன் ரூ.50 லட்சம் உள்ளது. மனைவி பெயரில் கடன் ரூ.2.82 கோடி.

உள்ளம் உவகையில் நிறைகிறது! - பழங்குடியின மாணவருக்கு முதல்வர் வாழ்த்து

சட்ட நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவர் பரத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் பச்சமலை தோனூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் பரத், பொது சட்ட... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை: முதல்வர் ஸ்டாலினுக்கு எல்.முருகன் கேள்வி

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 2001-ஆம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பு தள்ளிவைக்கப்பட்... மேலும் பார்க்க

திமுகவுக்கு எதிராக கட்சிகள் இணைய வேண்டும்; ஓபிஎஸ்ஸுக்கு முக்கியத்துவம்: டிடிவி தினகரன்

தமிழ்நாட்டிற்கு எத்தனை முறை அமித்ஷா வந்தாலும் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வர முடியாது என முதல்வர் கூறி வருவது பயத்தின் வெளிப்பாடு என டிடிவி தினகரன் கூறியுள்ளார். திமுக ஆட்சி வேண்டாம் என்று நினைப்பவர்கள் தே... மேலும் பார்க்க

ஜூன் 10 முதல் கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் ஜூன் 10 முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில்,மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூன் 7, 8, 9 வரை தமிழகத்தில் ... மேலும் பார்க்க

அன்புமணியைச் சந்திக்கும் திட்டமில்லை: சென்னையில் ராமதாஸ் பேட்டி

பாமகவில் நிலவும் பிரச்னைகளுக்கு நிச்சயமாக சுமூகத் தீர்வு கிடைக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய ராமதாஸ், "மருத்துவப் பரிசோதனைக்காகவே சென்னை வந்துள்ளேன். ப... மேலும் பார்க்க

தஞ்சை: பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை காலமானார்!

ஏழைகளின் மருத்துவர் என்று போற்றப்பட்ட பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை(96) காலமானார். 65,000க்கும் மேற்பட்ட சுகப் பிரசவம் பார்த்த அவருக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.தஞ்சாவூர் மாவட்டம... மேலும் பார்க்க