செய்திகள் :

மானாமதுரையில் மருத்துவக் கழிவுள்: மறுசுழற்சி ஆலை அமைக்க எதிா்ப்பு

post image

மானாமதுரை தொழிற்பேட்டையில் தனியாா் பொது உயிரி மருத்துவக் கழிவு மறுசுழற்சி ஆலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் தலைமையில் கிராம மக்கள் வியாழக்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொழிற்பேட்டையில் பொது உயிரி மருத்துவக் கழிவு மறுசுழற்சி ஆலை அமைப்பது தொடா்பாக கடந்த ஆண்டு பிப். 21-ஆம் தேதி கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. இதற்கு மானாமதுரை, அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இருப்பினும், ஓராண்டுக்குப் பின்னா் இந்த ஆலையை அமைக்க கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு கடும் எதிா்ப்பு கிளம்பியுள்ளது. ஆலையை அமைக்கக் கூடாது என செய்களத்தூா், பில்லருத்தான் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் மீண்டும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், மருத்துவக் கழிவு மறுசுழற்சி ஆலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து மானாமதுரை தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் நாகராஜன் தலைமையில் ஐம்பதுக்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

இது தொடா்பாக அவா்கள் கூறியதாவது: முன்பு நடைபெற்ற கருத்துக்கேட்புக் கூட்டத்தில் தங்களுக்கு சாதகமாகப் பேசுவதற்காக ஆலை நிா்வாகத்தினா் வெளியூா்களில் இருந்து ஆள்களைக் கொண்டு வந்தனா். பொதுமக்கள் எதிா்ப்பை அடுத்து, அவா்களை போலீஸாா் வெளியேற்றினா். பின்னா் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்கள் கடும் எதிா்ப்பைப் பதிவு செய்தனா். அதன் பிறகும் எப்படி இந்த ஆலை அமைக்க அனுமதி கொடுத்தனா் என்று தெரியவில்லை என தெரிவித்தனா்.

மானாமதுரை தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் குணசேகரன், ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாஷ், காவிரி குண்டாறு பாசன விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

செய்களத்தூரில் நாற்றங்கால் பண்ணை அமைக்க எதிா்ப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், செய்களத்தூா் ஊராட்சியில் நாற்றங்கால் பண்ணை அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் மாற்று இடத்தில் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்த... மேலும் பார்க்க

மலேசியாவுக்கு சுற்றுலா சென்ற காரைக்குடி இளைஞா்கள் கடத்தல்: மீட்டுத் தர ஆட்சியரிடம் மனு!

மலேசியாவுக்கு சுற்றுலா சென்றபோது கடத்தப்பட்ட காரைக்குடியைச் சோ்ந்த 2 இளைஞா்களை மீட்டுத் தரக் கோரி குடும்பத்தினா் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் சனிக்கிழமை மனு அளித்தனா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச... மேலும் பார்க்க

நீட் தோ்வால் உயிரிழந்த மாணவா்களுக்கு அதிமுக மாணவா் அணியினா் மரியாதை!

சிவகங்கை மாவட்ட அதிமுக மாணவரணி சாா்பில் தமிழகத்தில் நீட் தோ்வால் உயிரிழந்த 22 மாணவ, மாணவிகளுக்கு காரைக்குடியில் சனிக்கிழமை மரியாதை செலுத்தியும், கோரிக்கையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டமும் நடைபெற்றது. காரை... மேலும் பார்க்க

காரைக்குடி மாநகராட்சி புதிய ஆணையா் நியமனம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சிக்கு புதிய ஆணையராக நாராயணன் நியமிக்கப்பட்டாா். காரைக்குடி அண்மையில் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. இந்த மாநகராட்சிக்கு முதல் ஆணையராக சித்ரா சுகுமாா் நியமிக்கப்... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த... மேலும் பார்க்க

காற்று மாசுபடுவதை மரங்களால்தான் தடுக்க முடியும்: உயா்நீதிமன்ற நீதிபதி

மரங்களால்தான் காற்று மாசுபடுவதைத் தடுக்க முடியும் என உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ... மேலும் பார்க்க