மார்ச் 19-ல் பொன்முடி நேரில் ஆஜராக சிபிஐ நீதிமன்றம் உத்தரவு!
சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் பொன்முடி, வருகிற மார்ச் 19 ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2006-2011 ஆம் ஆண்டு காலகட்டத்தில் திமுக ஆட்சியில் விழுப்புரத்தில் செம்மண் வெட்டி எடுத்தது தொடர்பான அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை சிபிஐ, அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இதையும் படிக்க | குழந்தை குண்டாக இருக்கிறதா? எச்சரிக்கும் மருத்துவர்கள்!
இதுதொடர்பான வழக்கின் விசாரணை இன்று(புதன்கிழமை) சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. விழுப்புரத்தில் செம்மண் வெட்டி எடுத்ததில் அரசுக்கு ரூ. 28.36 கோடி இழப்பு என லஞ்ச ஒழிப்புத் துறை கூறியுள்ளது.
இதையடுத்து வருகிற மார்ச் 19 ஆம் தேதி பொன்முடி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளது.